• Breaking News

    அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கனமழையினால் தேங்கி நின்ற மழை நீர் வடிய வழிவகை செய்த தலைமையாசிரியருக்கு பாராட்டு


    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.இந்தப் பள்ளி சுற்றுப்புறம் மற்றும் வளாகத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கட்டிடங்கள்,சமையல் கூடம்,அங்கன்வாடி மையம்,நூலகம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி மழை நீர் குளம் போல தேங்கி நின்றது.



    இதனால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர் இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு வருகை தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் உடனடியாக மண்வெட்டி கொண்டு மழைநீர் வடிய வழிவகை செய்தார்‌.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது தலைமையாசிரியரின் இத்தகைய செயலுக்கு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    No comments