போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் காவல்துறையினர் பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. சென்னை - பெங்களூரு விரைவுச் சாலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு டிடிஎஃப் வாசன் சென்றார். அதிவேகமாக பயணம் செய்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே முன் சக்கர வாகனத்தை வீலிங் செய்த போது நிலைதடுமாறினார். அவரது வாகனம் சாலையோரம் தடுப்பை மோதி பறந்து விழுந்தது. நல்வாய்ப்பாக காயங்களுடன் டிடிஃப் வாசன் உயிர் தப்பித்தார்.
விபத்து காரணமாக டிடிஎஃப் வாசனின் வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment