அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை பரிசளித்து இருந்தார். இந்த கவசமானது ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தியின் போது அதிமுக பொருளாளரிடம் ஒப்படைக்கப்படும். முன்னதாக ஓ.பன்னீர்செல்வதிடம் வழங்கப்பட்டு வந்த நிலையில்,
அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் இருக்கிறார். அவரிடமே தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் இன்று வெளியான உத்தரவில், அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தான் இருக்கிறார். எனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசமானது அவரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment