தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - MAKKAL NERAM

Breaking

Sunday, November 12, 2023

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

 



இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். புதுமண தம்பதிகள் தலைதீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.


தீபாவளியான இன்று காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment