பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஜோவிகா வெளியேற்றப்பட்டுள்ளார். 60 நாட்கள் கடந்து அவர் வீட்டில் இருந்துள்ள நிலையில் அவரது சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஜோவிகா வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா ஆரம்பத்தில் நல்ல கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளராக இருந்து வந்தார். ஆனால் அதன் பிறகு பிக் பாஸ் வீட்டில் அதிகமாக தூங்குவது, பிரதீப்புடன் சண்டை போடுவது, மாயாவின் புல்லி கேங்குடன் சேர்ந்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கச் சொன்னது, பலரை ஒருமையில் பேசியது என பல விஷயங்கள் போகப்போக அவருக்கு நெகட்டிவாக அமைந்தன.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல்தான் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 63 நாட்கள் ஜோவிகா இருந்திருக்கிறார். வீட்டில் இவருக்கு ஒரு வாரத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. ஆக எட்டு வாரத்திற்கு 16 லட்ச ரூபாய் சம்பளம் என சொல்லப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் தூங்கி, சண்டை போட்டதற்கு ஜோவிகாவுக்கு இவ்வளவு சம்பளமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment