மேஷம் ராசிபலன்
மொத்தத்தில் இன்று, குதூகலம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போன்ற விஷயங்கள் உங்கள் நாளை மிகச்சுருக்கமாகக் முடித்துள்ளன. அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால், நீங்கள் சற்று நிம்மதியாக உணர்வீர்கள். இந்த நாளானது, நீங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுக்கூரும் சில மறக்கமுடியாத நினைவுகளைத் தரும். மகிழ்ச்சியானது உங்களை விட்டு வெகு தொலைவில் உள்ளது போலத்தோன்றுகிறது. முயற்சி செய்து, உங்களை நீங்களே ஊக்குவிக்க வேண்டும். உங்களை இறுகப்பற்றியுள்ள மன அழுத்தத்திலிருந்து விடுவியுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களை ஆட்கொள்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் அதிகமாகச் சிந்திக்க முயல்கிறீர்கள். அதிகமாகச் சிந்திக்க முயலும் போது, சிந்தனைக்கும், கவனம் செலுத்துவதற்கும் இடையேயான வரைமுறைகள் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆனால், உங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். உங்களை விரும்பும் ஒருவர், இன்று உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார். இன்று அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள்.

மிதுனம் ராசிபலன்
இன்றைய நாளில், அமைதியான மற்றும் செறிவுமிகுந்த எண்ணங்களால் உங்களது வாழ்க்கை நிறைந்திருக்க வேண்டும். இன்று, உங்களை நீங்களே வழிநடத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு உண்மையிலேயே தேவையானவைகள் தான், உங்களது வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வார இறுதியில், உங்களை நீங்களே நன்கு கவனித்துக்கொள்ள திட்டமிடுங்கள். மேலும் முன்னேறுங்கள். வாழ்க்கையில் குற்றஉணர்வின்றி மகிழுங்கள். ஏனென்றால், வெற்றி மற்றும் அதிர்ஷ்டதிற்கான அலைகள் உங்களது வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கின்றன.

கடகம் ராசிபலன்
உங்களது கோபம் உங்களை தோற்கடித்து விடுகிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் சில சிக்கலான நபர்களை சந்திக்கிறீர்கள். அவர்களின் ஒருசில தந்திரங்கள் உங்களை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டது. இந்த சூழலில், ஒரு பொறுப்பான தெரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பொறுமையை ஒருபோதும் இழக்காதீர்கள். மற்றவர்களை ஏமாற்றும் விஷயங்களை செய்யவேண்டாம். நீங்கள் நிறைய விஷயங்களை செய்து முடிக்கவில்லை என்பதைக் பொருட்படுத்தாமல், விஷயங்களைச் சிறப்பாகச் செய்வதில் மட்டுமே உங்கள் நேரத்தையும், சக்தியையும் மையமாகக் கொள்ளுங்கள்.

சிம்மம் ராசிபலன்
சிறு ஆலோசனைகளைப் பெறுவது எப்போதும் தேவையாகிறது. ஏனெனில், இவை உங்களை ஒருபோதும் வலுவற்றவராக மாற்றப்போவதில்லை. உங்களுக்கு உதவி தேவை என்று மற்றவர்கள் நினைப்பதை நீங்கள் வெறுக்கிறீர்கள். இது நீங்களும் அறிவானவர் தான் என்ற ஒரு உணர்வினை சற்றும் குறைக்காது. சிலநேரங்களில், வலுவான மனம் கொண்டவர்களுக்குக் கூட, ஆலோசனைகள் தேவைப்படுகிறது. உங்களிடம் ஆலோசனை சார்ந்த உதவிகளுக்காக வருபவர்களிடம், இது உங்களுக்கு தேவையற்றது என்று கருதி அவர்களை மறுக்கக்கூடாது. நீங்களும் இப்படி கேட்கும் நேரம் இல்லாமலா போய்விடும்? ஆகையால், நீங்கள் அவர்களுக்கு உதவும் போது, அது வேறுவழியில் உங்களுக்கு உதவியாக வந்தடையும். இதனை, முயற்சி செய்ய தவற வேண்டாம்!

கன்னி ராசிபலன்
வேலைச் சுமை அதிகரித்து உள்ள நிலையில், எங்கிருந்து தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்கள் வேலைக்கும், வீட்டிற்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும், இல்லையெனில், இதனால் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று, நீங்கள் நினைப்பதை விட அதிகமாக பணியாற்ற வேண்டும். அறிவுடன் பேசி, அதன் மூலம் பயனுள்ள யோசனைகளைக் கண்டறியுங்கள். மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான யோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

துலாம் ராசிபலன்
கடந்த நிகழ்ந்த விஷயங்கள் சீராக இல்லாமல் இருக்கலாம். உங்களை விடக் கடினமான காலங்களில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை எண்ணி நேர்மறையாகச் செயல்படுங்கள். விரைவில் உங்களைக் கஷ்டத்தில் ஆழ்த்தும் விஷயங்கள் மாறும். உங்கள் பலம் மற்றும் உங்கள் சமூக திறன்கள் புதிய வாய்ப்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். அடுத்த சில நாட்களில் பயணங்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு நிறைய இடம் உள்ளது. உங்களைப் புத்துயிர் பெறச் செய்ய இது ஒரு நல்ல நேரம்.

விருச்சிகம் ராசிபலன்
இன்று, நீங்கள் சலிப்படைந்தது போன்று உணர்கிறீர்களா? உங்கள் வாழ்வை எப்படி மேம்படுத்துவது என்று யோசித்து வருகிறீர்கள். இதை யோசிக்க இப்போதே சிறந்த நேரமாக இருக்கும். மற்றவர்களின் யோசனைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை பயன்படுத்துவது உங்களுக்கு போதுமானதாக இருக்காது. உங்கள் மூளையை கசக்கி பிழிந்து, ஆழமாக யோசித்து, உங்களுக்கான யோசனையை தேர்ந்தெடுக்க வேண்டும். இது என்னால் முடியாது என்று சாக்குபோக்கு சொல்வது உங்களுக்கு எப்போதும் உதவாது. ஆகையால், இன்று உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம். எனவே, முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

தனுசு ராசிபலன்
பணம் மிகவும் முக்கியம். ஆனால், நீங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது பணத்தை விட முக்கியமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள். ஆனால், உங்களைப் பயன்படுத்திக் கொள்ளமுயல்பவர்களிடமிருந்துவிலகியே இருங்கள். இதுபற்றி, அவ்வப்போது சிந்திக்க வேண்டாம். அதிகப்படியான சிந்தனையில் கவனம் செலுத்துவதற்கு முன்பு, அதற்கானதிட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று உங்கள் உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற அன்புக்குரியவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு அவர்கள் உங்களுக்கு உதவியிருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரம் இது.

மகரம் ராசிபலன்
பொறுப்பை கண்டு பயந்து ஓடுவது சிறந்ததாக இருக்காது. நீங்கள் மேலும் முன்னேற உங்களுக்கு உண்டாகும் பயத்தை எதிர்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் அன்பைத் தேடுகிறீர்கள். இந்த நாளில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் எச்சரிக்கையாக இருங்கள். அதற்கான நேரமும், சக்தியும் உங்களிடம் உள்ளதா? ஆபத்தான ஒப்பந்தத்தில் பங்கேற்பது குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் பங்கேற்க விருப்பமில்லை என்பதை வெண்ணெய்யைக் கத்தியால் வெட்டுவது போன்று உறுதியாகச் சொல்ல வேண்டும். நீங்கள் மறுப்பது யாரையும் காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம் ராசிபலன்
நீங்கள் வாழ்க்கையையினையும், அதன் சிக்கல்களையும் மிக ஆழமாகத் தேடிப் பார்த்த நேரங்கள் உள்ளன. மாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். கொட்டிய பாலைப் பற்றி கவலைபடாமல், வாழ்க்கையை வளமாக்கும் நேரம் இதுவாகும். நன்றியுணர்வு என்பது நீங்கள் மறந்துவிடுகின்ற ஒன்று. இது உங்கள் வாழ்க்கையில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு முன்பு உங்களுக்கு உதவிய நபர்களுடன் மீண்டும் பழகுங்கள். எங்கள் வார்த்தையினைப் பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!

மீனம் ராசிபலன்
மற்றவர்கள்உங்களைப்பாராட்டுவதைக்காதுகொடுத்துக்கேளுங்கள். நீங்கள் பேசும் கனிவான வார்த்தை, உங்களை நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும். அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து நல்ல ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று நினைத்தாலும் கூட, உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் விரைவில் நல்ல பலனைத் தரும். உங்கள் மனதில் ஒரு புதிய முயற்சி தோன்றினாலும், அதை வெளிக் கொண்டு வர நீங்கள் தயங்குகிறீர்கள். ஏனெனில், நீங்கள் தேவையில்லாத காரணங்களுக்காக பயப்படுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும். மேலும், புதியமுயற்சிகளைத்துவங்குங்கள்.
No comments:
Post a Comment