காவி கொடியுடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் இஸ்லாமிய பெண்........ - MAKKAL NERAM

Breaking

Thursday, December 28, 2023

காவி கொடியுடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் இஸ்லாமிய பெண்........

 


”ராமரை வணங்குவதற்கு ஒருவர் இந்துவாக இருக்க வேண்டிய அவசியமில்லை; ஒரு நல்ல மனிதராக இருப்பதுதான் முக்கியம்” என்கிறார் இஸ்லாமிய இளம்பெண்ணான ஷப்னம். பிறப்பில் இஸ்லாமியர் என்ற போதும், தீவிர ராமபக்தையாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். பெரிதாக எந்த திட்டமிடலும் இல்லாது மும்பையிலிருந்து அயோத்தி நோக்கி பாதயாத்திரையாக கிளம்பிவிட்டார் ஷ்பனம்.


"சாதி மத வேறுபாடுகளை கடந்து, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்" என்று நெக்குருகும் ஷப்னம், இதுபோன்ற கடினமான ஆன்மிக யாத்திரைகளை ஆண்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற கருத்தையும் உடைத்திருப்பதாக பெருமை கொள்கிறார்.


தனது சகாக்களான ராமன் ராஜ் சர்மா மற்றும் வினீத் பாண்டே ஆகியோருடன், 1,425 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்கிறார். தினமும் 25 - 30 கிமீ நடக்கும் இவர்கள் தற்போது, மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்தவாவை அடைந்துள்ளனர். மூவரும் சமூக ஊடகங்களின் பிரபலங்களாக மாறியதில், செல்லும் ஊர்களில் எல்லாம் பொதுமக்கள் சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.


சமூக ஊடகங்களில் ஷப்னத்தை சாடும் இஸ்லாமியர்கள் சிலர், ஷப்னம் தனது ஆண் நண்பருக்காக திட்டமிட்டு நாடகம் ஒன்றை நடத்துவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனினும் எதிர்மறை கருத்துக்கள், பழிப்புகளை புறக்கணித்து காவிக் கொடிகளுடன் அயோத்தி நோக்கி பயணத்தை தொடர்கிறார் ஷப்னம்.

No comments:

Post a Comment