நாகப்பட்டினம் மாவட்டத்தில் கல்வி கடன் முகாம் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தகவல்
உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவ-மாணவிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் கல்வியினை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கு பெறும் கல்விக்கடன் முகாம் வருகின்ற டிசம்பர் 08, 2023 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கூட அரங்கில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
பல்வேறு காரணங்களால் பல குடும்பங்களின் நிதி நிலை பிரச்சனையால் மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியவில்லை. அத்தகைய மாணவர்கள் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்ய இந்த கல்வி கடன் முகாம் மூலம் அவர்களுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே கடன் பெற விரும்பும் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். முதுகலை கல்வி பயில்வோருக்கு இளங்கலை பட்டய சான்றிதழ் அல்லது ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் இருக்க வேண்டும்.
மாணவர் மற்றும் பெற்றோர் இருவரின் புகைப்படம்-2 மற்றும் kyc ஆவணங்கள் ஆதார் கார்டு பான் கார்டு. மாணவர்கள் கல்லூரியில் பயில்வதற்கான சான்று(bonafide certificate( فرش கல்வி கட்டண अपंप शुभाश्रमक (fee structure). கல்லூரி/ பல்கலைக் கழகத்தில் கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட சேர்க்கைக்கான சான்று. சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பெற்றோர் வருமானச் சான்று, வங்கி கணக்கு புத்தகம்.
ஏழரை லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் விண்ணப்பிப்பவர்கள் சொத்து பிணை பத்திரம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கூறிய ஆவணங்களை மாணவ மாணவிகள் தயார் செய்த பின் வித்யாலட்சுமி இணைய முகப்பில் பொதுவான கல்விக் கடன் விண்ணப்பப் படிவம் மூலம் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பத்தின் மென்நகல் சம்பந்தப்பட்ட வங்கிக்கு இணைய வாயிலாக சென்றடையும்.எனவே 08-12-2023 அன்று நடைபெறவுள்ள கல்வி கடன் முகாம் நிகழ்வில் மாணவ-மாணவிகள் பங்கு பெற்று பயனடைய கேட்டு கொள்ளப்படுக்கிறார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், நாகப்பட்டினம்.
நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments