• Breaking News

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட காலை உணவு திட்ட சமையல் அறை கட்டிடத்தை அந்தியூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்


    ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி,  அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் ,  நகலூர்  ஊராட்சி ஈசப்பாறை  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் திட்டத்தின் கீழ் 7,43,000 மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையல் அறை மைய கட்டிடத்தினை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார். 


    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்  ஆனந்தன், சிறுபான்மை இன அணி மாவட்ட தலைவர்  செபஸ்தியான், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்  தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments