புதுக்கோட்டை: பெட்ரோல் பங்குகளில் அடுத்தடுத்து நடந்த விபத்து; பேரிகார்டு அமைக்க சமூக ஆர்வலர் கோரிக்கை
![]() |
சமூக ஆர்வலர் ராஜா |
புதுக்கோட்டை மற்றும் கட்டுமாவடி பெட்ரோல் பங்குகளில் நடந்த விபத்துகளில் இரண்டு பேர் பலியாகினர். எனவே பெட்ரோல் பங்குகள் அருகே பேரிக்கார்டு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அறந்தாங்கி அடுத்த கட்டுமாவடியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா கூறும் போது:
"கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிய ராசப்பன் (65) என்பவர் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 7ம் தேதி வியாழக்கிழமையன்று கட்டுமாவடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப திரும்பிய ஆட்டோ மீது தண்ணீர் ஏற்றி வந்த மினி லாரி மோதியதில் ஆசிபா பேகம் (9) என்ற சிறுமி உயிரிழந்தார். இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்குகளில் நடந்த விபத்துகளில் பலத்த காயமும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே இது போன்ற விபத்துக்களை தடுக்கும் விதமாக பெட்ரோல் பங்குகளில் பேரிகார்டு அமைக்க வேண்டும்" என்று கூறினார்.
No comments