• Breaking News

    இன்றைய ராசிபலன் 11-01-2024

     


    Todays Tamil Rasi palam

    மேஷம் ராசிபலன்

    நீங்கள் கனவு கண்ட வழியில், எழுந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்! வேலை செய்து உங்கள் வாழ்க்கையைப் பிரகாசமாக்க வேறு யாருடைய உழைப்பாவது உங்களுக்குத் தேவையா? இல்லை. இது நீங்கள் தான்- உங்கள் பங்கை உங்களை விட யார் சிறப்பாகச் செய்ய முடியும்! உங்கள் உறவு ஒரு கடினமான இணைப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதுபற்றி உங்கள் மனது பேச வேண்டிய நேரம் இது. உங்கள் ஆணவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு குழந்தையைப் போலச் சிந்தியுங்கள். நீங்கள் ஒரு தவறான ஆட்டத்தை விளையாடியுள்ளீர்களா? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

    Todays Tamil Rasi palam

    ரிஷபம் ராசிபலன்

    உங்கள் பாதையை தவறவிடாதீர்கள். மேலும், தவறான தூண்டுதல்களிலிருந்து விலகிச் செல்வதற்கு கடுமையாக முயற்சி செய்யுங்கள். மனஅழுத்தத்தை ஏற்படுத்த முயலாதீர்கள். உங்கள் விடாமுயற்சிகுரிய உழைப்பு விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும். உங்களை சிக்கல்களுக்கு உள்ளாக்காத சில நல்ல நண்பர்கள், உங்களைத் தொடர்பு கொள்ளவர். இன்று, புதிய நிதி முதலீடுகள் அல்லது கடன் வழங்குவது குறித்து நீங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களது செலவுகளை மதிப்பிடு செய்வதற்கும், அதற்கேற்ப நிதியினை ஒதுக்குவதற்கும் இது ஒர் சிறந்த நாளாக இருக்கும்.

    Todays Tamil Rasi palam

    மிதுனம் ராசிபலன்

    நீங்கள் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருங்கள், கடுமையான வார்த்தைகளைப் பேசுவது எந்தவொரு சூழ்நிலையையும் மோசமானதாக மாற்றி விடும். இதனால் உங்களுக்குத் தாங்கிக் கொள்ள முடியாத மன அழுத்தமும், கட்டுப்படுத்த முடியாத கோபமும் உண்டாக்கும். இந்த நாளில் சிறிய ஓய்வு எடுத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். இந்த ஓய்வு உங்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுப்பதுடன், உங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும். மிகுந்த கட்டுப்பாடு கொண்டவராக இருக்க வேண்டாம், உங்களிடம் உள்ள சில பொறுப்புகளை விட்டுவிட முடிவு செய்யுங்கள்.

    Todays Tamil Rasi palam

    கடகம் ராசிபலன்

    உங்களுக்குத் தோன்றும் உள்ளுணர்வுகள் அனைத்தும் உறுதியாக நடந்து வருகிறது. உங்கள் மனதில் தோன்றும் சில விஷயங்கள், இதை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கலாம். அவற்றை, கொஞ்சமாக தெரிவு செய்யுங்கள். நீங்கள் மனக்கசப்பு கொண்ட ஒரு நபரிடம் உள்ள குறைகளைச் சரி செய்யுங்கள். அந்த குறைகள் குறித்து நீங்கள் சிந்தித்து, அவரிடம் உண்மை இல்லை என்று தெரிந்து கொண்டால், அதை மேம்படுத்த அவருக்கு உதவுங்கள்!

    Todays Tamil Rasi palam

    சிம்மம் ராசிபலன்

    குடும்பத்தினரும், அன்பான நண்பர்களும் இன்று உங்கள் நாளில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து வெறுமனே பரிதாபம் மட்டுமே படுவார்கள். படுக்கையிலிருந்து எழுந்து, புதிய காற்றைச் சுவாசிக்க வெளியே செல்லுங்கள். ஒரே இரவில் நீங்கள் நம்பிக்கையை வளர்க்க முடியாது. சரியான திசையில், சிறிய படிகள் வைத்து நம்பிக்கையை வளர்ப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சுய மதிப்பை யாரும் வரையறுக்க முடியாது என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. எனவே, இனி யாராவது அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று நீங்கள் காத்திருக்க வேண்டாம்.

    Todays Tamil Rasi palam

    கன்னி ராசிபலன்

    ஒரே பாதையில் செல்லும் போது கவனச்சிதறல்கள் மற்றும் சோதனைகளை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், அதை நீங்கள் செய்து விட்டீர்கள். நீங்கள் செய்யும் செயல்களை முழு மனத்துடன் செய்யும் போது, அதற்கான பலனை நீங்கள் பெறுவீர்கள் என்பதற்கு இதுவே சான்றாகும். மகிழ்ச்சியின் திறவுகோல் திருப்தியாக இருப்பது தான். முக்கிய விஷயங்களை மீண்டும் செய்து முடிக்க உங்களுக்கு உதவும் உங்கள் நண்பர்களுடன் பேசுங்கள். இப்படிச் செய்யும் போது, நாட்கள் செல்லச் செல்ல சில அற்புதமான ஆச்சரியங்கள் உங்களுக்கு ஏற்படும். இன்று, நீங்கள் சிறந்த சமயோசிதமாக செயல்படுவீர்கள். அதை உங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

    Todays Tamil Rasi palam

    துலாம் ராசிபலன்

    இன்று, வாழ்நாள் முழுவதும் நீங்கள் நன்றாக விரும்பும் என கருதும் நபர்களோடு அணிசேருங்கள். இது உங்கள் புதிய முயற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது உங்கள் வாழ்க்கை வேறு பாதையை நோக்கி பயணிக்க உதவும். தனிநபர்கள் மற்றும் அவர் சார்ந்த சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான குணங்களைக் தெரிந்து கொள்ள உங்கள் மனதைத் திறந்திடுங்கள். மற்றவர் மீது பழிபோடுவதைத் தவிர்த்து, உங்களுக்கு அவசியமில்லா நபர்களிடம் கூட, கரிசனையோடு இருங்கள். இலட்சியத்தோடு பணியினைச் செய்வதற்கு, உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து புனரமைப்பு செய்யுங்கள்.

    Todays Tamil Rasi palam

    விருச்சிகம் ராசிபலன்

    இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் கவனச்சிதறல்களால் உங்கள் பணி சற்று பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆகவே, அதைச் சரி செய்ய இன்று முதல் முயற்சி செய்யுங்கள். உண்மையில் எந்த செயலில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் பல திறமை வாய்ந்தவர் என்பது உண்மைதான் என்றாலும், உங்கள் வெற்றிக்கான தடைகளைக் கண்டுபிடித்து, அவற்றை மேம்படுத்த மட்டுமே உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிடுங்கள்.

    Todays Tamil Rasi palam

    தனுசு ராசிபலன்

    இது உங்களுக்கான சிறந்த நாள், கண்டிப்பாக உங்களுக்கு சில மறக்க முடியாத நினைவுகளைக் கொடுப்பதுடன், வாழ்நாளில் மறக்க முடியாத புதையலாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். உண்மையில் அன்பும், பாசமும் அவர்களுக்குத் தேவை. இந்த நேரத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அது தேவைப்படும். நல்ல விஷயங்களில் உங்கள் ஆற்றலில் செலுத்துவதில் இன்று கவனம் செலுத்துங்கள். உங்களது உரையாடல் திறமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் குறிப்பிடத்தக்க ஒருவரின் நல்ல புத்தகத்தில் உங்கள் பெயரும் இடம் பெறலாம்.

    Todays Tamil Rasi palam

    மகரம் ராசிபலன்

    மற்றவர்களைத்திட்டுவதற்குப்பதிலாக ,அவர்களிடம் அன்பான வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கோப உணர்வுகளை பின்னுக்குத் தள்ள கற்றுக்கொள்ள வேண்டும். பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஒரு பெரிய முடிவை எடுக்க முடியும். மனஅழுத்தத்தைத்தவிர்த்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நோக்கி மெதுவாகச் செல்வதில் கவனம் செலுத்துங்கள். இது நிச்சயமாக உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் உங்களைப் பற்றி, நீங்களே நல்ல முறையில் உணர்ந்து கொள்ள வைக்கும். உங்கள் குடும்பம் இன்று உங்களுக்கு ஆதரவாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.

    Todays Tamil Rasi palam

    கும்பம் ராசிபலன்

    இந்த நேரத்தில் நீங்கள் மந்தமாக உணர்கிறீர்களா? நீங்கள் இரவு முழுவதும் செலவழித்து அந்த எண்ணங்களால் துயரப்பட்டிருப்பது தெரிகிறது. காதல் என்பது எங்கும் உள்ளது. ஆனால், அதற்காக நீங்கள் அவசரப்பட வேண்டாம். நீங்கள் கோபமானவர் என்று உங்கள் கூட்டாளியை உணர வைக்காதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடன்சகஜமாகப்பழகுங்கள். சில தாமதமான வாழ்த்துக்கள், அந்த விலைமதிப்பற்ற கவனம் தேவைப்படும் எவருக்கும், மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கும். விட்டுக்கொடுப்பது அவர்களை மகிழ்விக்கும்!

    Todays Tamil Rasi palam

    மீனம் ராசிபலன்

    விரக்தியாக இருப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. நீங்கள் இன்னும் நிறையத் தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தடைகள் உங்களை விட பெரியவை அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், சுமூகமாக பணியைச் செய்யலாம். உங்கள் சகா ஊழியர்களுடன் நல்ல முறையில் பேசி பழகத் தயங்க வேண்டாம். இப்படிப் பேசுவதை அவர்களும் பாராட்டுவார்கள். இன்று அமைதியான மனதுடன் விஷயங்களைச் சிந்தியுங்கள்.

    No comments