திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியைச் சேர்ந்த ஒன்று முதல் 8 வார்டுக்கு உட்பட்ட பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 13 துறைகள் பங்கேற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஆரணி,பிஞ்சலார் தெருவில் உள்ள சாந்திநாத் திருமண மண்டபவளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு,ஆரணி பேரூராட்சியின் செயல் அலுவலர் அபுபக்கர் தலைமைதாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி சட்டமன்ற வெ.அன்புவாணன், கேவிஜி.உமாமகேஸ்வரி, உறுப்பினர் துரைசந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு திட்ட முகாமை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மு.பகலவன், பா.சே.குணசேகரன்,வே. ஆனந்தகுமார், பொறியாளர் அணி ஆரணி எஸ்.ரோஸ்பொன்னையன், ஆரணிபேரூர் செயலாளர் பி.முத்து,முன்னாள் பேரூர் செயலாளர்கள்டி.கண்ணதாசன், ஜி.பி.வெங்கடேசன்,பேரூர் பொருளாளர் கு.கரிகாலன், சிறுபான்மையினர் அணி ரகுமான்கான், பேரூர் துணை செயலாளர்கள் கோபிநாத்,கலையரசி, நில வழகன், வார்டு செயலாளர்கள் நீலகண்டன், பாலகுருவப்பா உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, பேரூர்,கிளை கழகநிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 606 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. வடக்குநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தினி தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய திமுகசெயலாளர் செல்வசேகரன் முன்னிலை வகித்தார். அனைவரையும் அம்பேத்கார் நகர் ஊராட்சி திமுகசெயலாளர் கார்த்திக் வரவேற்றார். நிகழ்ச்சியின் முடிவில்,ஊராட்சி செயலர் சௌமியா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment