தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் துணைத் தலைவர் சின்னச்சாமி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,சங்க நடவடிக்கைகள் குறித்து விளக்க உரையினைமாவட்ட செயலாளர் சு.தாமோதரன் ஆற்றினார்.
மாவட்ட துணை தலைவர்கள் சக்தி திருமுருகன், சரவணன், துவாஸ் ,மாவட்ட இணைச்செயலாளர்கள் ரெங்கநாதன், பானுமதி ,திருப்பதி, மாவட்ட தணிக்கையாளர்கள் சிவகுமார், பிரபாகரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய கட்டிடப் பணிகளை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட செயற்குழுவில் மாவட்ட துணை தலைவராக ரெங்கநாதன், மாவட்ட இணை செயலாளராக சிவக்குமார், மாவட்ட தணிக்கையாளர்களாக புருசோத்தம்மன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தின் நிறைவாக, மாவட்ட துணை தலைவர் ச.முனிராஜ் நன்றி உரையாற்றினார்.


0 Comments