தமிழகத்தில் வீட்டு உபயோக பொருட்களில் விற்பனையில் சாதித்து வரும் பிரபல நிறுவனமான வசந்த&கோவின் 105ஆவது கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக முதல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக முதல் தளத்திலிருந்த வீட்டு உபயோகப் பொருட்களான ஏசி, ஸ்மார்ட் போன், எல்இடி டிவி,பிரிட்ஜ் வாஷிங் மெஷின், உள்ளிட்ட சுமார் 1 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவலாளி அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே அனைத்து பொருட்களும் தீயில் கருகியது.
இது தொடர்பாக வசந்த்&கோ நிறுவனத்தின் கும்மிடிப்பூண்டி கிளை மேலாளர் ஜெகதீஷ் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment