இன்றைய ராசிபலன் 13-01-2024
மேஷம் ராசிபலன்
உங்கது இயல்பான உள்ளுணர்வுகள் அதன் உச்சத்தைக் அடைந்துள்ளது. நீங்கள் ஒரு ஆசானாகவோ அல்லது அறிவாளியாகவோ உணர்வீர்கள். தனிநபர்கள் உங்களது ஆலோசனைகளை விரும்புவர். உங்களிடம் தெளிவான மற்றும் யோசனையில்லாத விஷயங்களைப் பற்றி தற்பெருமையோடு பேச முயற்சி செய்யாதீர்கள். இது உங்களை அறிவிலிகளாக மாறச்செய்யும். சில வருத்தமளிக்கும் சூழ்நிலைகள் உங்களை நோக்கி வரக்கூடும். ஆனாலும், நீங்கள் அவற்றை எதிர்த்து போராடமல் இருக்கப் போவதில்லை. எனவே, இயல்பாக இருங்கள்!
ரிஷபம் ராசிபலன்
ஒருபோதும் அதிர்ஷ்டம் உங்களை நோக்கி வருவதில்லை. நீங்களே அதை தேடிக்கண்டுபிடித்து, அதன் பின்னே செல்லுங்கள். உங்கள் வழியில் செல்லும் இந்த புதிய வாய்ப்பை, நீங்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். உங்களைச் சுற்றிலுமுள்ள கவனச்சிதறல்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையின் கடினமான காலங்களில் உங்களுக்கு ஆதரவாக நின்ற நபர்களிடம் இணக்கமாக இருங்கள். சின்னஞ்சிறு விஷயங்களில் கூட, புலப்படும் அழகியல்களை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள். ஆகையால், உங்களுக்கு நிச்சயமாக ஓய்வு தேவை.

மிதுனம் ராசிபலன்
உங்கள் உள் மனம் புதிகாக ஒன்றைத் தேடுகிறது. இது உங்கள் மனதில் உள்ளதா? இல்லையென்றால், மற்றவரின் மனதில் உள்ளவற்றை சரியான வழியில் தெரிவிப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம். தவறான புரிதல்களை நீக்கி அனைவரும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும்.

கடகம் ராசிபலன்
இது ஒரு அற்புதமான பயணத்திற்கான நேரம், எனவே அந்த பயணத்திற்குக் கொண்டு செல்லும் பையை வெளியே எடுங்கள். இதை சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பயணமானது எந்த ஒரு தொழிநுட்ப கருவிகளும் இல்லாத பயணமாக இருக்கட்டும்! இது நிச்சயமாக உங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும். மேலும், இது உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். உங்களது நீண்ட கால எதிரி உங்கள் உதவியை நாடுவார், அவருக்கு நீங்கள் உதவ வேண்டும். நீங்கள் செய்யும் உதவிகள் குறுகிய காலத்தில் உங்களுக்கு வெகுமதியைப் பெற்றுத் தரும்.

சிம்மம் ராசிபலன்
சிறு ஆலோசனைகளைப் பெறுவது எப்போதும் தேவையாகிறது. ஏனெனில், இவை உங்களை ஒருபோதும் வலுவற்றவராக மாற்றப்போவதில்லை. உங்களுக்கு உதவி தேவை என்று மற்றவர்கள் நினைப்பதை நீங்கள் வெறுக்கிறீர்கள். இது நீங்களும் அறிவானவர் தான் என்ற ஒரு உணர்வினை சற்றும் குறைக்காது. சிலநேரங்களில், வலுவான மனம் கொண்டவர்களுக்குக் கூட, ஆலோசனைகள் தேவைப்படுகிறது. உங்களிடம் ஆலோசனை சார்ந்த உதவிகளுக்காக வருபவர்களிடம், இது உங்களுக்கு தேவையற்றது என்று கருதி அவர்களை மறுக்கக்கூடாது. நீங்களும் இப்படி கேட்கும் நேரம் இல்லாமலா போய்விடும்? ஆகையால், நீங்கள் அவர்களுக்கு உதவும் போது, அது வேறுவழியில் உங்களுக்கு உதவியாக வந்தடையும். இதனை, முயற்சி செய்ய தவற வேண்டாம்!

கன்னி ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானதைப் பற்றி, நீங்கள் எப்போதாவது ஒரு யதார்த்தமான எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறீர்களா? அப்படி இல்லையென்றால், அது பற்றி இன்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்களது பலத்தில் கவனம் செலுத்துங்கள், இன்று உங்கள் எதிர்பார்ப்புகளைப் பற்றித் தெளிவாகச் சிந்தியுங்கள். உங்கள் உறவுகளில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் உள்ளது. நீங்கள் சிறிய விஷயங்களை ஆழமாகத் தோண்டி பார்ப்பதை நிறுத்தி, விட்டுவிட வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கை போட்டி நிறைந்ததாக உள்ளது. வாழ்க்கையில் போட்டிக்கும், உறவுக்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.

துலாம் ராசிபலன்
உலகம் உங்களுக்கு மிகச் சிறந்த இடமாக இருக்க வேண்டுமா? எல்லோரும் உங்களுக்கு எப்போதும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உங்கள் சொந்த அறிவுக்காக நீங்கள் அதைச் செய்ய வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும். உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் சில பெரிய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களை ஆரம்பத்தில் நீங்கள் சங்கடமாக உணரலாம், ஆனால் கூடுதல் நேரம் எடுத்து நீங்கள் அந்த மாற்றத்தைச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள்.

விருச்சிகம் ராசிபலன்
உங்கள் படைப்பு ஆற்றல் பெரியளவில் வெளிப்படும். மேலும், உங்கள் படைப்பாற்றல் இன்று மற்றவர்களை வெகுவாக ஈர்க்கும். நீங்கள் முக்கியமானகாரியங்களைச்செய்வதில் திறமையானவராக இருப்பீர்கள். முழுமையாக உங்கள்திறமையாகச்செயல்படுத்தப்பலவிஷயங்களைக்கூர்ந்து கவனியுங்கள். செய்ததவற்றுக்காகமற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.ஆணவம்காரணமாக மன்னிப்புகேட்காமலிருந்துவிட வேண்டாம். இது நிச்சயமாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். அன்பான வார்த்தைகளைப் பேசுவது நிச்சயமாக இன்று உங்களுக்கு உதவும்.அன்பாகப்பேசுவது, இந்த நாளில் நன்மைகளை உண்டாக்கும்.

தனுசு ராசிபலன்
இன்றைய காலகட்டத்தில், நீங்கள் மனம் போனபோக்கில் வாழும் மனப்பாங்கானது, உங்களது கல்வி அல்லது பணி போன்றவற்றை நோக்கி பயணிக்கும் பாதையை குறுகலாக்கிவிடும். எப்போதும், உங்கள் நண்பர்களை நெருக்கமாக வைத்திருங்கள். இன்றைய காலகட்டத்தில், சவால்களை சந்திக்க பயப்பட வேண்டாம். கடலளவு விடாமுயற்சி செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் இலக்கை விரைவில் அடைவீர்கள். ஒருபோதும் உங்கள் நேர்மறை உணர்வினை இழக்காதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள் பின்பு, அனைத்தும் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் உற்றுநோக்குங்கள்.

மகரம் ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்குப் புரியாத சில சம்பவங்கள் உள்ளன. சிலர் உங்களிடம் ஏன் இரக்கமற்ற முறையில் நடந்த கொள்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் செல்ல வேண்டும் அல்லது உங்கள் சொந்த அறிவுத் திறனை அதிகரித்துக் கொள்ள இதைக் கவனிக்க வேண்டும். சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உங்களைச் சுற்றி இருக்கலாம். இது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். இது முதலில் ஒரு சுமையாகத் தோன்றினாலும், நீங்கள் அதை நேசிப்பீர்கள்.

கும்பம் ராசிபலன்
நீங்கள் இன்று போராடும் மனப்பான்மையுடன் உள்ளீர்கள், ஆனால் உங்கள் மனநிலை கட்டுப்பாட்டில் இல்லை. சிறிதளவு பதட்டம் உங்கள் உணர்ச்சிகளில் காணப்பட்டால், அது உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கி விடலாம். உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், உங்களது செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது. நீங்கள் இருக்கும் மோசமான சூழ்நிலையிலிருந்து வெளியேறத் தந்திரங்களைக் கையாள்வதும் மிகவும் முக்கியம். நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விட நீங்கள் கடினமான நபர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அமைதியாகவும், மற்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பதும் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவும்.

மீனம் ராசிபலன்
நீங்கள் சமீபத்தில் சோம்பேறித்தனமாக விஷயங்களை செய்து கொண்டிருந்தீர்கள். இப்போது பரவாயில்லை. ஏனென்றால், உங்களிடம் ஏதோ மாற்றம் இருக்கிறது. நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. சில நல்லதாகவும் மற்றவை அவ்வளவு நல்ல விஷயங்கள் இல்லாமலும் உள்ளன. இந்த நாள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் தொடங்கலாம். அனுபவம் வாய்ந்தவர்களுடன் பேசுவது அல்லது நண்பர்களிடம் நம்பிக்கை வைப்பது உங்கள் கவலையைப் போக்க உதவும். தியானம், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட உங்களுக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும்.
No comments