மேஷம் ராசிபலன்
ஆழக்கிடக்கின்ற வாழ்க்கையின் ஆகச்சிறந்த அழகியலை, நீங்கள் தொட விரும்புகிறீர்கள். மக்களிடத்திலோ, இடங்களிலோ அல்லது சிறு விஷயங்களிலோ அழகியலைத் தேடுங்கள். நீங்கள் அனுபவிக்க நினைக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சத்தை, நேரமின்மை காரணமாக அனுபவிக்க முடியாமல் இருந்தால், இன்று அதை உண்மையிலேயே அனுபவிப்பதற்கான திட்டங்களை தீட்டுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு தருணத்தையும் அனுபவியுங்கள். அப்போது, நீங்கள் அதை மிகவும் நேசிப்பீர்கள்.
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் ஒருதலை காதலில்சிக்கியுள்ளீர்கள்? அது உங்களை அதிகளவில் பாதிக்கிறதா? நீங்கள் மீண்டும்அதிலிருந்துமீள வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மனதிலேயே கேள்வி கேளுங்கள். அந்த குறிப்பிட்ட நபரை வெற்றி கொள்ள நீங்கள் எந்த அளவுக்கு முயல்வீர்கள்? நீங்கள் உங்கள் செயல்களை இருப்பதை விடஅதிகமாகக்காட்டுவதாகத்தோன்றுகிறது, அது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எந்த வரம்பையும் மீறாதீர்கள். கூர்மையான முனையின் மீது நடந்து செல்லாதீர்கள். உங்கள் ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்து வைத்து, உங்கள் செயல்களைக் கண்காணிக்கவும்.

மிதுனம் ராசிபலன்
நல்லவர்களாக இருப்பதற்குப் பதிலாக உண்மையானவராக இருங்கள். உண்மையான உலகில், நல்லவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. கடந்த காலங்களில், உங்களது நேர்மையான தன்மையைப் பயன்படுத்தி சிலர் உங்களை ஏமாற்றியதுடன், காயப்படுத்தியுள்ளனர். பிடிவாதமாக இருப்பது எப்போதும் ஒரு நல்ல விஷயம் அல்ல. உங்கள் வழிகளில் உள்ள தவறுகளை ஒரு சிலர் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளனர். அவற்றில் சிலவற்றை நீங்கள் சரி செய்து விட்டீர்கள், சிலவற்றைச் சரி செய்யாமல் விட்டு விட்டிருக்கலாம். எனவே உங்கள் இழப்புகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அந்த இழப்புகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

கடகம் ராசிபலன்
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்களுடன் மட்டுமே போட்டியிடுகிறீர்கள். நீண்ட காலத்திற்குப் பின்னர், உங்களுக்கு மிகவும் சிறந்த நபரிடம் இருந்து இதை நீங்கள் கேட்கலாம். அவர்களிடம் பெரிய இடைவெளியைப் பற்றிக் கேள்விப்படுவது, பொறாமையைத் தூண்டக்கூடாது. அவர்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள், அவர்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள். நீங்கள் எங்குத் தொடங்க வேண்டும் என்று நினைத்து, அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்குங்கள். ஒரு நாளைக்கு, ஒரு செயலை எடுத்து புத்திசாலித்தனமாக வேலை செய்ய உத்வேகம் பெறுங்கள்.

சிம்மம் ராசிபலன்
உங்களைப் பற்றித் தாழ்வாக எண்ண வேண்டாம். பல வழிகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் திறந்த மனதுடன் இருங்கள், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் அல்லது மனம் தளரலாம். இந்த கடினமான கட்டத்தைக் கடந்து செல்ல அவர்களுக்கு உதவுவது உங்களின் கடமையாக இருக்கும். அவர்களுடனான தகவல் தொடர்பு , அவர்களின் திறமைகள் இன்று உங்களுக்கு உதவும்.

கன்னி ராசிபலன்
நீங்கள் சற்று பின்வாங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்களது புதுமை புகுத்தும் அணுகு முறையினையும் மற்றும் உற்சாகத்தையும் கண்டு, தனிநபர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களது வீடும், குடும்பமும் உங்களை நன்றாக புரிந்து கொள்ளும். மேலும், எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், அவர்கள் உங்களால் பயனடைவார்கள். இன்று, அவர்களை உங்களது நேசத்துக்கு உரியவர்களாகவும், ஏற்றுக்கொள்ளப் பட்டவர்களாகவும் உணர வையுங்கள்.

துலாம் ராசிபலன்
எல்லா தவறுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்றைய நாளை உங்களது குடும்பத்திற்காக அர்ப்பணியுங்கள். உங்களது குடும்பதிற்காக செலவிடும் நேரத்தின் அளவை குறைக்கக்கூடிய விஷயங்களை, அனுமதிக்கும் மனநிலையில் இல்லாதிருங்கள். வரவிருக்கும் வாரத்தில் உங்களை சரியான பாதையில் நிலைநிறுத்தக்கூடிய விஷயங்களைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்க, இன்று சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தவர்களைப் பாராட்டுங்கள். சிந்தனைமிக்க செய்கைகளால் அவர்களை ஆச்சரியப்படுத்துவது, உங்களது அன்பினை அவர்களுக்குக் காண்பிப்பதற்கான ஒரு நல்வழியாகும்.

விருச்சிகம் ராசிபலன்
மக்களை விமர்சன ரீதியாகத் தீர்மானிப்பது மற்றும் சந்தேகத்தின் பலனைச் சாதகமாக வழங்காமல் இருப்பது, உங்களின் வலிமைகளில் ஒன்றான அமைதியை விட்டுவிட்டு இன்று நீங்கள் செயல்களில் இறங்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவத் தயாராகவே இருந்திருக்கிறீர்கள், மற்றவர்கள் உங்களுக்கு அரிதாக சில நேரங்களில் மட்டுமே உதவுகிறார்கள் என்பதை நீங்கள் கண்டறிந்துள்ளீர்கள். அதிக நேரம் வேலை பார்ப்பதாக நீங்கள் உணர்ந்தால், ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள்.

தனுசு ராசிபலன்
உங்கள் வார்த்தைகளால் இன்று உங்களுக்கு நல்லது நடக்கும். கனிவான பேச்சுகள் உங்களது காயங்களை ஆற்றுவதுடன், உங்களுக்கு ஆறுதலையும் தரும். முந்தைய ஆண்டுகளின் காயங்கள் மறைந்து விடும். மக்கள் இன்று உங்களை புதிய மரியாதையுடன் பார்ப்பார்கள், ரகசியங்களை பாதுகாப்பதில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள், உங்கள் புதிய நண்பர்களும் இது போன்று இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். இந்த எதிர்பார்ப்பால் உங்களுக்கு வருத்தமே ஏற்படும். ஒருவேளை நபர்களோ இடங்களோ உங்களுக்கு ஒரு மோசமான நேரத்தை நினைவூட்டலாம், மோசமான நினைவுகள் உங்களை புதிய நிலைக்கு கொண்டு செல்லும்.

மகரம் ராசிபலன்
உலகம் உங்களுக்கு மிகச் சிறந்த இடமாக இருக்க வேண்டுமா? எல்லோரும் உங்களுக்கு எப்போதும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உங்கள் சொந்த அறிவுக்காக நீங்கள் அதைச் செய்ய வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும். உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் சில பெரிய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களை ஆரம்பத்தில் நீங்கள் சங்கடமாக உணரலாம், ஆனால் கூடுதல் நேரம் எடுத்து நீங்கள் அந்த மாற்றத்தைச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள்.

கும்பம் ராசிபலன்
நீங்கள் மிகவும் சிறந்தவர், எனவே உங்களைப் பற்றிக் கவலைப்பட்டு மனம் தளர வேண்டாம். உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் தைரியமானவர், புத்திசாலி, திறமையானவர். நேர்மறை சொற்களைப் பேசுங்கள் மற்றும் உங்கள் முகத்தைப் புன்னகையுடன் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்கள் குறிக்கோள்கள் சற்று தெளிவில்லாமல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். உங்களை ஆக்கிரமித்துள்ள எதிர்மறை எண்ணங்களைப் போக்கத் தியானத்தில் ஈடுபடுங்கள்.

மீனம் ராசிபலன்
பல்வேறு விஷயங்களில் மக்கள் ஆலோசனை பெறுவார்கள். இது சில அற்புதமான நட்புகளை உருவாக்க உதவும். உங்கள் முன்னுரிமைகளை மறுசீரமைப்பதன் மூலம் இன்றைய நாளை உலகின் சிறந்த நாளாக மாற்ற உங்களால் முடியும். சில விஷயங்களை அதிகமாகச் செய்வதைத் தவிர்க்கவும். இப்போது நீங்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் உங்களைப் பலப்படுத்தும். இரட்டை ஆசீர்வாதங்கள் விரைவில் உங்களை வந்தடையும்.



0 Comments