சுன்னத் செய்து.... சிலுவையிலேயே தொங்கினாலும்…. சிறுபான்மை மக்கள் எடப்பாடியை நம்ப மாட்டார்கள்...... ஜாதகம் அப்படி...... கொந்தளித்த மருது அழகுராஜ்

 


அதிமுக கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கழக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், தலைநகர் சென்னை பட்டணத்திலே நிர்வாகிகள் எல்லாம் கூப்பிட்டு மாவட்ட கழகச் செயலாளர்கள் எல்லாம் அமர வைத்து,  எதிர்கால அரசியல் குறித்து, ஆலோசனை செய்வதற்காகத்தான் இந்தக் கூட்டம் இங்கே கூட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், பேசுவதை தெளிவாக கேட்பதற்கு வாய்ப்பு இல்லாத வகையில்,  ஒலிப்பெருக்கி உங்களுக்கு இடையூறாக இருப்பது என்பதை நான் அறிகிறேன்.


எதிரொலிக்கிறது…. பேசுவது எதிரொலிக்கிறது…. காரணம் அண்ணன் ஓபிஎஸ்யின் அரசியல் தான் தமிழகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் அரங்கம் சூழ்ச்சகமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. என் அன்பிற்குரிய நண்பர்களே… ஒருவன் என்ன செய்தான்? காரை ஓட்டிக்கொண்டு வந்து,  கார் பார்க்கிங்கிலே  நிறுத்திவிட்டு வேக வேகமாக இறங்கி இரண்டு டயரை கழட்டினான். நான் போய் கேட்டேன்.


ஏன் தம்பி காரை கொண்டு வந்து பார்க்கிங் செய்துவிட்டு இரண்டு சக்கரத்தை கழட்டுகிறாயே என்ன விஷயம் என்று கேட்டேன்? அவன் சொன்னான்….  அண்ணா இங்கே இரண்டு சக்கர வாகனம் மட்டும் பார்க்கிங் செய்ய வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். அதனால், நான் இரண்டு சக்கரங்களை கழட்டிவிட்டேன் என்று சொன்னான்.


அந்த சொன்னவனின் நிலை தான் எடப்பாடி னுடைய அரசியலும், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிகளில் இருந்து வெளியே வந்து விட்டால்,  சிறுபான்மை மக்களெல்லாம் தன்னை ஆதரிப்பார்கள் என்று எடப்பாடி நம்புகிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்….  எடப்பாடி சுன்னத் செய்து கொண்டு,  சிலுவையிலேயே தொங்கினாலும்….  சிறுபான்மை மக்கள் எடப்பாடியை நம்ப மாட்டார்கள். காரணம் எடப்பாடியின் ஜாதகம் அப்படிப்பட்ட ஜாதகம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments