தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
கோவில்பட்டி நகராட்சி ராமசாமி தாஸ் நினைவு பூங்கா முன்பு வன்முறையை ஒழிப்போம் பெண்களை பாதுகாப்போம் " என்ற தலைப்பில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கா கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், உள்ளிட்டோர் பங்கேற்று கொடியை செய்து துவக்கி வைத்தனர்.
ராமசாமி தாஸ் நினைவு பூங்காவில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி கோவில்பட்டி நகரின் முக்கிய சாலை வழியாக சென்று எட்டையாபுரம் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே நிறைவடைந்து.
மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் ஜி.வி.என் கல்லூரி மாணவிகள் பெண்கள் என் ஆர்வமுடன் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழும் எம்பி கனிமொழி சார்பில் வழங்கப்பட உள்ளது.

0 Comments