இன்றைய ராசிபலன் 21-02--2024
மேஷம் ராசிபலன்
உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தேவைப்படும் விஷயங்களை அடையாளம் கண்டு, அவற்றை அடைய பணியாற்றுங்கள். நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய விரும்புகிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இன்று உங்கள் உடல்நலம் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துங்கள். யாரிடமும் உதவி கேட்க வெட்கப்பட வேண்டாம். புதிய விஷயங்களைத் தொடங்குங்கள். இதனால் கிடக்கும் முடிவுகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்களைப் பரப்பும் நபர்களிடம் இருந்து விலகி இருங்கள்.
ரிஷபம் ராசிபலன்
பொறுப்பை கண்டு பயந்து ஓடுவது சிறந்ததாக இருக்காது. நீங்கள் மேலும் முன்னேற உங்களுக்கு உண்டாகும் பயத்தை எதிர்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் அன்பைத் தேடுகிறீர்கள். இந்த நாளில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் எச்சரிக்கையாக இருங்கள். அதற்கான நேரமும், சக்தியும் உங்களிடம் உள்ளதா? ஆபத்தான ஒப்பந்தத்தில் பங்கேற்பது குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் பங்கேற்க விருப்பமில்லை என்பதை வெண்ணெய்யைக் கத்தியால் வெட்டுவது போன்று உறுதியாகச் சொல்ல வேண்டும். நீங்கள் மறுப்பது யாரையும் காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மிதுனம் ராசிபலன்
சில உறவுகளை சிறந்தவையாக மாற்ற அதிக சிரத்தை தேவைப்படுகிறது. அதை முதலில் நினைவிற் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் நடந்த வேதனையான விஷயங்களை மறக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அதை ஏன் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. நண்பா! நீ ஒரு உண்மையான போர்வீரன். அனைத்தும் விரைவில் சிறப்பாக அமையும். சற்று பொறுத்திரு. பல விஷயங்கள் உங்கள் நம்பிக்கையை குறைத்து, ஓர் பாதுகாப்பற்ற தன்மையை உங்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளன. உங்களை நீங்களே நம்பிய அந்த நிலைக்கு இப்போது என்னவாயிற்று? இதற்குரிய பதில் உங்களிடம் தான் உள்ளது. இன்றே நீங்கள் அதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம் ராசிபலன்
நீங்கள் இன்று ஓர் செயல் நோக்கத்தோடு ஈர்க்கப்பட்டு, உற்சாகமாக இருக்கிறீர்கள். மேலும், இது உங்கள் படைப்பாக்கத் திறன்களைச் செயல்படுத்துவதற்கும் அட்டவணையினை சிறப்பாக அமைக்கவும் உதவும். கிரகங்களானது உங்களது நிதி, விலைமதிப்பற்ற சொத்துக்கள் மற்றும் கடவுள் கொடுத்த ஈவுகளில் சாதகமான பார்வையினைக் கொண்டுள்ளன. இன்று, நேர்மறை சிந்தனைகள் மிக அதிகமாக மேலோங்கி இருக்கும். எனவே, ஒவ்வொன்றையும் நுட்பத்தோடும், மிகக் கவனமாகவும், பயன்படுத்துங்கள். ஒரு வார்த்தையை உச்சரிப்பதற்கு முன்பு சிந்தியுங்கள். நீங்கள் உண்மைக்குப் புறம்பான சொற்களை ஒருமுறை உதிர்த்து விட்டால், அது மற்றொரு நபருக்கு நரக அனுபவத்தை கொடுத்துவிடும். எனவே, அதிலிருந்து விலகியே இருங்கள்!
சிம்மம் ராசிபலன்
உங்கள் மனதை ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபடுத்துங்கள். உங்கள் எண்ணங்களுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான திருப்பத்தைக் கொண்டுவரும். ஒரு புதிய பொழுது போக்கைச் செய்யத் தொடங்குங்கள். ஒரு தொழில் மாற்றம் தொட்டு விடும் தூரத்திலேயே உள்ளது. இத்தகைய மாற்றங்கள் குறித்து நம்பிக்கையுடன் இருங்கள். மாற்றம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் உங்களுக்கு உதவும். உங்கள் நாளை நேர்மறை ஆற்றலுடன் தொடங்க வேண்டும். நீங்கள் ஒரு தடுமாற்றத்தில் இருக்கிறீர்கள். இயற்கையின் மாற்றத்தால் நீங்கள் நிச்சயமாகப் பயனடையலாம். ஒரு விடுமுறை இப்போது உங்களுக்கு ஒரு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும்.
கன்னி ராசிபலன்
கெட்ட நண்பர்கள் உங்களுக்கு அதிக கஷ்டத்தைக் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கையிலிருந்து தவறானவிஷயங்களைக்களைந்து விட வேண்டிய நேரம் இது. உங்கள் லட்சியத்தை அடைய வேண்டும். நீங்கள் எதிர்கொள்ளும் தடைகளைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம். குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். சமூகக் கூட்டம் மற்றும் வெளியில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் பயனடையலாம். சரியானதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் வேலையில், உங்களுக்குள்ளவிருப்பங்களைஆய்வு செய்யுங்கள். உங்கள் பணியில் ஒரு வரையறுக்கப்பட்ட பாதையை உருவாக்கவும்.
துலாம் ராசிபலன்
யாரும் வந்து உங்கள் கதவை தட்டி, உங்களுக்கான மேஜையை போட்டு உங்களை உட்கார வைப்பார்கள் என்று காத்திருக்க வேண்டாம். எல்லா வேலைகளையும் நீங்களே செய்யவேண்டும். நீங்கள் செல்லும் வழியில் நிறைய வாய்ப்புகள் வரும். அதில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும் வாய்ப்பில் சரியானவற்றை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் வழியில் செல்லும் வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, மற்றவர்ளின் மகிழ்ச்சியை கெடுக்காமல், பார்த்து கொள்ளுங்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க, அற்பத்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கையின் அதிகமான விஷயங்களைக் குறித்து, நீங்கள் உள்ளார்ந்த அக்கறையுடையவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய முதலீடும், சரியான திசையில் செல்வதற்கு உதவும் ஒரு படியாகும். மேலும், இது உங்களின் இன்னொரு அங்கம் ஆகும். ஆனாலும், இது நிறைய பேருக்குத் தெரியாது. உங்களுக்கு அதிகமான அழுத்தம் இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தாலும் கூட, கடினமான சூழ்நிலைகளில், நீங்கள் சிந்தித்து அமைதியைப் பேணவேண்டும்.
தனுசு ராசிபலன்
மற்றவர்களைத்திட்டுவதற்குப்பதிலாக ,அவர்களிடம் அன்பான வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கோப உணர்வுகளை பின்னுக்குத் தள்ள கற்றுக்கொள்ள வேண்டும். பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஒரு பெரிய முடிவை எடுக்க முடியும். மனஅழுத்தத்தைத்தவிர்த்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நோக்கி மெதுவாகச் செல்வதில் கவனம் செலுத்துங்கள். இது நிச்சயமாக உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் உங்களைப் பற்றி, நீங்களே நல்ல முறையில் உணர்ந்து கொள்ள வைக்கும். உங்கள் குடும்பம் இன்று உங்களுக்கு ஆதரவாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.
மகரம் ராசிபலன்
இன்று மென்மையான மனதுடன் நடந்து கொள்வதுடன் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்வு செய்யுங்கள். எதிர்மறை எண்ணங்கள் இன்று உங்கள் மனதையும் இதயத்தையும் கடுமையாகப் பாதித்து விடக்கூடாது. இன்று மிகவும் பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதனால், நீங்கள் செய்ய நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இயல்பான திறன்கள் மற்றும் திறமைகளைப் பற்றிப் பாராட்டு கிடைக்கச் செய்யும். புன்னகையுடன், நிதானமாக, புதிய யோசனைகளை மனதுடன் ஒன்றிணைக்க கற்றுக் கொள்ளுங்கள்.
கும்பம் ராசிபலன்
கடந்த காலத்தில் நடந்த வேதனையான விஷயங்களைப் பற்றி இன்று நீங்கள் சிந்திக்க வேண்டாம். இப்படிச் சிந்தித்தால், நீங்கள் மீண்டும் மனதிற்கு வலியை ஏற்படுத்தும் பாதையில் செல்ல விரும்ப மாட்டீர்கள். உங்களுக்கு உள்ள சிறந்த ஞாபக சக்தியே சில நேரங்களில் பிரச்சினையாக மாறி விடலாம். இதனால், உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை நீங்கள் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. அமைதியாக இருங்கள், இது உங்களுக்கு இப்போது அவசியம் தேவைப்படுகிறது. உங்கள் இலக்கை அடைய நீங்கள் வலிமை பெற்றவராக இருக்க வேண்டும். இன்று நீங்கள் எதிர்பாராத சிலர் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவதைக் காணலாம்.
மீனம் ராசிபலன்
சில நாட்களுக்கு முன்புவரை, உங்கள் உறவுகளில் சில விரும்பத்தகாத விவாதங்கள், கருத்து மோதல்கள் மற்றும் நிறைய சிக்கல்கள் இருந்தன. முதலில் இதனைக் கடந்து சென்று, உங்களுக்கு எவ்விதமான வெறுப்போ, கோபமோ இல்லை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்கள் உங்களிடம் ஆலோசனைகளைப் பெறுவார்கள். உங்கள் கருத்துக்களில் நேர்மையாக இருங்கள். அவர்களுக்கு உங்களது தீர்ப்போ அல்லது விமர்சனமோ தேவையில்லை. உங்களது அறிவுரைகள், அவர்களின் வாழ்க்கையைத் உண்மையில் சீர்செய்யக்கூடும்.
No comments