• Breaking News

    டைட்டில் விட்டு 300 நாளாச்சு "படத்தோட அப்டேட் என்னாச்சு" - அஜித் ரசிகர்களின் போஸ்டர் வைரல்

     

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது 62 வது படம் குறித்த அறிவிப்பு கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. முதலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்த திரைப்படம், பின்னர் மகிழ் திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ’விடாமுயற்சி’ என படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.கடந்த அக்டோபர் மாதம் ‘விடாமுயற்சி’ பட குழு அசர்பைஜன் நாட்டிற்குச் சென்று முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு திரும்பியது. அதுதவிர படம் குறித்த வேறு அப்டேட்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்களை வெளியிடுமாறு சமூக வலைதளங்கள் வாயிலாக அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், பிரபலங்களிடம் இது தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்பும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாக பரவி வந்தன.இந்த நிலையில் நடிகர் அஜித் நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ’வாலி’ திரைப்படம் இன்று ரீரிலீஸ் செய்யப்பட்டது. இதை ஒட்டி பல்வேறு திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கூடி இந்த திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர். அந்த வகையில் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ‘வாலி’ திரைப்படம் வெளியானது. திரையரங்கம் முன்பு கூடிய அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது புதிதாக ஒரு போஸ்டரையும் அவர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில், ’லைக்கா’வை காணவில்லை. ’விடாமுயற்சி’ டைட்டில் விட்டு 300 நாள் ஆச்சு. படத்தோட அப்டேட் என்ன ஆச்சு? கண்டுபிடித்துத் தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’ என்று எழுதப்பட்டிருந்தது. அஜித் ரசிகர்களின் இந்த போஸ்டர் புரட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    No comments