துபாய் - ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் செயல்பட்டுவரும் துபாய் முத்தமிழ் சங்கத்தின் 34 ஆம் ஆண்டு வெற்றிவிழாவை முன்னிட்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா அமீரகத்தில் பிரமாண்டாமாக கொண்டாடப் பட்டதற்காகவும் துபாயில் மெரினா பகுதியில் உள்ள சுற்றுலா உல்லாச படகில் பிரமாண்டமாக வெற்றிவிழா முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் ராமசந்திரன் மற்றும் தலைவர் ஷா தலைமையில் நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது, ரமேஷ், சின்னா, தங்கத்துரை ஆகியோர் முன்னிலையில் கேக்வெட்டி சிறப்பாக நடைபெற்றது..
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக பெருமாள் பூக்கடை நிறுவனர் குடும்பத்தினர் சங்கர் மற்றும் குடும்பம், ஐட்டக் நிறுவனர் ரமேஷ் மற்றும் குடும்பம் , சமியுக்தா உணவகம் நிறுவனர் முரளி, கேப்டன் தொலைக்காட்சி, புதுவை ஸ்டார் தொலைக்காட்சி, தமிழக குரல் இணைய தளம், மக்கள் நேரம் இணைய தளம், மக்கள் நம்பிக்கை தினசரி காலை நாளிதழ், வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், கிரீன் குளோப் நிறுவனர் டாக்டர் ஜாஸ்மீன், தமிழ் தேசிய நாளிதழ் தினகுரல் அமீரக தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, மதுரை பிரியாணி உணவகம் நிறுவனர் பாலா, துபாய் பெண்கள் அசோசியேசன் பொது செயலாளர் சானியோ, குடவாசல் அல்பகத் , டிக்டாக்தஞ்சை நசீர் அஹமது, அமீரக பாடகி மிருத்ளா ரமேஷ், கல்ப் ஸ்டோரி யூடூப் லாவண்யா, தர்ஷினி மற்றும் டிக்டாக் பிரபலங்கள் உள்ளிட்டோர் பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் ஊடக ஆதரவில் அமீரகத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழ் தேசிய நாளிதழான தினகுரல், வாரஇதழ் வணக்கம் பாரதம் மற்றும் கேப்டன் டிவிக்கு , புதுவை ஸ்டார் டிவிக்கும் அதன் சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்வு ஒரு மனநிறைவான நிகழ்வாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறோம் என்று முத்தமிழ் சங்கத்தின் தலைவர் ஷா நன்றி கூறி விருந்து உபசரித்து நிகச்சிக்கு வந்திருந்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் பூமாலை போட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுக்கொடுத்து கௌரவிக்கப்பட்டு ஆதரவாளர்கள் மற்றும் வந்திருந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment