அரசூர் ஊராட்சியில் தாசநாயக்கனூர் பகுதியில் தார் சாலை அமைக்க ஒன்றிய பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ,  அரசூர் ஊராட்சி தாசநாயக்கனூர் அசோகன் வீடு முதல் உதயகுமார் வீடு வரை 6,80,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் ,  சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ  பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் (வ ஊ),  மணிவண்ணன் மேலாளர் (துணை வட்டார வளர்ச்சி அலுவலர்), ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள் ,  கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன்( எ) செந்தில்நாதன் , சத்தி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன் ,  முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் விஸ்வநாதன் ,  அரசூர் ஊராட்சி துணை தலைவர் கே. பி. சரவணன் ,  பாலப்பாளையம் கிளை  செயலாளர் டி. வரதராஜ் , திமுக நிர்வாகிகள் ,  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments