அமெரிக்காவில் கூகுள் பே சேவை நிறுத்தம்
அமெரிக்காவில் ஜூன் 4ம் தேதி முதல் கூகுள் பே செயலியின் சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கூகுள் வாலட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயலியை விட வாலட் பயன்பாடு அதிகம் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.உலகில் பல்லாயிரக்கணக்கானோர் கூகுள் பே செயலி மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கூகுள் பே செயலியின் சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது பயனாளர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜூன் 4ம் தேதி முதல் அமெரிக்காவில் பழைய கூகுள் பே செயலியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதாவது இப்போது அதன் பழைய பதிப்பு வேலை செய்யாது. அனைத்து அம்சங்களையும் கூகுள் வாலட் இயங்குதளத்திற்கு மாற்றுவதன் மூலம் கூகுளின் கட்டணச் சலுகையை எளிதாக்குவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.அமெரிக்காவில் கூகுள் பே செயலியின் சேவை நிறுத்தப்படும் என அறிவித்தாலும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற பிற சந்தைகளில் கூகுள் பே ஆப் தொடர்ந்து சீராக இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூகுள் வாலட் ஆப்ஸுக்கு மாறுமாறு கூகுள் பே பயனர்களை கூகுள் அறிவுறுத்துகிறது. பயனர்கள் தங்கள் கணக்கில் எஞ்சியிருக்கும் பணத்தைப் பார்க்க முடியும் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றும் வசதி கூகுள் பே இணையதளம் மூலம் கிடைக்கும்.
No comments