• Breaking News

    நாகப்பட்டினம்,திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளுக்கான பயிற்சி

     

    நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் வட்டார வள பயிற்றுநர்களுக்கு மகளிர் சுய உதவி குழு ஊக்கநர், பிரதிநிதிகளுக்கு மற்றும் உறுப்பினர்களுக்கான ஆளுமை  பொறுப்புணர்வு மற்றும் புத்தக பராமரிப்பு குறித்த பயிற்றுநர்களுக்கான பயிற்சி சி எம் டி சி  அலுவலகத்தில் தஞ்சாவூரில் நடைபெற்றது. 

    இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் உமா (ம) பாலன் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி தொடங்கி வைத்தார்  மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர்கள் ஸ்ரீரங்கபாணி மற்றும் காந்திமதி மாநில வள பயிற்றுநர் முத்துக்குமார் பயிற்சி அளித்தார் வட்டார வள பயிற்றுநர்களுக்கு சுய உதவி குழு ஊக்குநர்  பிரதிநிதிகள் (ம) உறுப்பினர்களுக்கு சுய உதவி குழு நோக்கம், குழுவின் வரலாறு, குழுவின் கோட்பாடு,பஞ்ச சூத்திரம், ஊக்குநர் மற்றும் பிரதிநிதி பொறுப்புக்கள்,குழு கூட்டம், உறுப்பினர் பங்கேற்பு ,சேமிப்பு மற்றும் சந்தா வசூல் ,சேமிப்பு இடைவெளி, உள் கடன் வழங்குதல், வெளிக்கடன் வழங்குதல்,  பதிவேடுகள் பராமரிப்பு, கடன் சுழற்சி,சேமிப்பு அதிகரித்தல், உறுப்பினர்களுக்கு வங்கி கணக்கு துவங்குதல், காப்பீடு,உரிமைச் சார்ந்த திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள்,சேவை திட்டங்கள்,சமூக மேம்பாடு செய்தல், குழுக்களின் சிறந்த சாதனைகள், தணிக்கை விவரம், நிதி உள்ளாக்கம்  பண்ணைச் சார்ந்த தொழில்கள், பண்ணை சாரத் தொழில்கள், வங்கி வட்டி மானியம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் நான்கு மாவட்ட வட்டார வள பயிற்றுநர்கள் திவ்யா,வினோதினி, சங்கீதா மற்றும் நித்யா அவர்கள் நன்றி கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.




    மக்கள் நேரம் செய்திக்காக நாகை மாவட்டம் நிருபர் சக்கரவர்த்தி 

    விளம்பர தொடர்புக்கு 9788341834

    No comments