ஆக்கூரில் தாருஸ்ஸலாம் நர்சரி பிரைமரி பள்ளி 21-வது ஆண்டு விழா
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர், ஜின்னாத் தெருவில் இயங்கும் தாருஸ்ஸலாம் நர்சரி பிரைமரி பள்ளி 21-வது ஆண்டு விழா நிகழ்ச்சி ஜாமிஆ மஸ்ஜித் சமுதாய கூடத்தில் ஆக்கூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை தலைவர் முஹம்மது சித்திக் தலைமையில் நடைப்பெற்றது.பள்ளி தாளாளர் அக்பர் அலி வரவேற்புரை ஆற்றினார்.பள்ளி ஆசிரியர் மீனாவதி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.ஆக்கூர் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மணிமேகலை சிறப்புரையாற்றினார்.தாருஸ்ஸலாம் மக்தப் மெம்பாட்டுக்குழு பொருளாளர் முஹம்மது ஹிலுருதீன் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர் பாத்திமா ஜின்னா ஆண்டறிக்கை வாசித்தார்.இந்நிகழ்வில் ஜமாத்தார்கள், பள்ளி மாணவ-மாணவி களின் பெற்றோர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் இறுதியில் தலைமையாசிரியர் கமலவாணி நன்றி கூறி நிறைவு செய்தார்.
No comments