சமண தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் நடை பயணம் மேற்கொண்ட அஹிம்சை நடை பயண குழுவினருக்கு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் 90வது அஹிம்சை நடையினருக்கு கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே நடை பயண குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொல்லியல் அறிஞர் வேதாசலம், அஹிம்சை நடையின் நிறுவனர் ஸ்ரீதரன், மதுரை சமண பண்பாட்டு மன்றத்தின் செயலர் ஆனந்தராஜ்,கழுகுமலை 1008 பகவான் அதிசய ஷேத்திர கமிட்டி செயலர் முகேஷ் ஜெயின், பொறுப்பாளர் மகேந்திர குமார் ஜெயின் ஆகியோர் தலைமையில் வந்த குழுவினருக்கு ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மகா வீரரின் போதனைகளான கொல்லாமை ,எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், உண்மை பேசுதல், தீண்டாமை,போன்ற போதனைகளை போதித்தனர், மற்றும் சமண தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கவும், வலியுறுத்தி நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வில் ஆக்டிவ் மைண்ட்ஸ் நிர்வாகிகள் இராமசுப்ரமணியன், முத்து மாரியப்பன்,தொழிலதிபர் ரித்திக் ஜெயின்,மேற்பார்வையாளர் மாடசாமி, மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments