இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 19, 2024

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா

 

இன்று, திரைப்படங்களை விட விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் ஒரு நடிகை பற்றி தெரிந்து கொள்வோம். தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பபவர் நயன்தாரா. 20 வருடங்களுக்கும் மேலாக அவர் தனது வாழ்க்கையில் 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஜவான்' திரைப்படத்தில் அறிமுகமானார். இது நயன்தாராவை இந்திய அளவில் மேலும் பிரபலமாகியது என்று கூறலாம். நயன்தாரா நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் உள்ளார்.அவர் சமீபத்தில் தனது பிராண்டான 9Skin மற்றும் Femi9 என்ற பெண் சுகாதார பிராண்டையும் அறிமுகப்படுத்தினார். அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். விளம்பரங்களுக்கு நயன்தாரா 5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் 2 நாட்களில் எடுக்கப்பட்ட டாடா ஸ்கைக்கான 50 வினாடி விளம்பரத்துக்காக இந்தத் தொகையை வசூலித்துள்ளார். இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகையாக நயன்தாரா மாறியுள்ளார்.நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துள்ளார். ஒரு படத்திற்கு ரூ 10 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார் என்றும், அவரின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment