தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் தனக்கு மட்டுமே இருக்கிறது. அதை மீறி மன்சூர்அலிகான் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்" என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் குற்றம் கூறியிருந்தார். இதையடுத்து கண்ணதாசன் கட்சியின் பொதுச்செயலாளரே கிடையாது என்றும், கட்சி அலுவலகத்தில் உள்ள ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் உள்ளிட்டவற்றை அவர் திருடிச் சென்றுவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார் மன்சூர் அலிகான்.
இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் இருந்த லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் உள்ளிட்டவற்றை கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் திருடி சென்றுவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மன்சூர்அலிகான், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment