மயிலாடுதுறை: மாதிரிமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ சிவராமகிருஷ்ண ஸ்வாமிகள் அதிர்ஷ்டத்தில் கும்பாபிஷேகம்


மயிலாடுதுறை மாவட்டம்  மாதிரிமங்கலம் கிராமத்தில் காவிரி கரையோரம் 50 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் வாழ்ந்து வந்தார். பல அற்புதங்களை நிகழ்த்திய சித்தர் சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு சுவாதி நட்சத்திர தினத்தில் பரிபூரணமடைந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஜீவசமாதி எழுப்பப்பட்டு ஆலயமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அவர் சித்தி அடைந்ததின் ஐம்பதாவது ஆண்டு விழா மற்றும் ஜீவசமாதியின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு 27 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் மற்றும் விக்னேஸ்வர பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து நேற்று இரண்டாவது கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Post a Comment

0 Comments