செங்கம் அருகே பசுமாட்டை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 19, 2024

செங்கம் அருகே பசுமாட்டை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை


 செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ,(பூ மல்லி) பகுதியில் ராஜவேலுக்கு சொந்தமான பசு மாட்டை வீட்டுத் தோட்டத்தில் கட்டி வைத்தனர். இரவு நேரங்களில் வேட்டைக்குச் சென்ற மர்ம நபர்கள் பசுமாட்டை காட்டுப்பன்றி என்று நினைத்து கழுத்து பகுதியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.மேலும் இது குறித்து செங்கம் வனத்துறை அதிகாரி பழனிசாமி அவர்கள் நேரில் சென்று விசாரித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் S. சஞ்சீவ்

No comments:

Post a Comment