• Breaking News

    எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக பரவுவது வதந்தி - நடிகை கிரண்

     

    தமிழ் சினிமாவில் வின்னர் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கிரண். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கிறார். பட வாய்ப்புகள் தான் இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சிலாவது கலந்துகொள்வோம் என அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்படி இருந்தும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கிரண் தனக்கு பட வாய்ப்புகள் வராத காரணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய கிரண் ” காதலனின் பேச்சை கேட்டு படங்களில் இருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது நினைக்கிறன். அது தான் நான் செய்த பெரிய தவறு. இருந்தாலும் மீண்டும் நடிக்க தயாராகிவிட்ட நிலையில் கூட சிலர் தன்னை தவறாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள்.இந்த மாதிரி நேரத்தில் கூட காதலன் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டான். எங்களுக்குள் சிறுசிறு பிரச்சனைகள் இருந்ததே எங்களுடைய பிரிவுக்கு காரணம். ஒரு முறை என்னை நேரில் அழைத்தான் அழைத்து கடுமையாக தாக்கினான். அந்த வேதனை எல்லாம் என்னால் சொல்ல கூட முடியவில்லை. அந்த அளவிற்கு வழி ரொம்பவே எடுத்தது.இப்படி பல காரணங்களால் பட வாய்ப்புகளை இழந்தேன். குறிப்பாக என்னுடைய காதலன் தான் பட வாய்ப்புகள் போனதற்கு காரணம்.  மேலும் எனக்கு திருமணமாகவில்லை என்றும், எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக பரவுவது   வதந்திகள்என்றும் கிரண் கூறியுள்ளார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கிரண் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments