இன்றைய ராசிபலன் 17-04-2024
மேஷம் ராசிபலன்
இன்றைய நாளில், அமைதியான மற்றும் செறிவுமிகுந்த எண்ணங்களால் உங்களது வாழ்க்கை நிறைந்திருக்க வேண்டும். இன்று, உங்களை நீங்களே வழிநடத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு உண்மையிலேயே தேவையானவைகள் தான், உங்களது வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வார இறுதியில், உங்களை நீங்களே நன்கு கவனித்துக்கொள்ள திட்டமிடுங்கள். மேலும் முன்னேறுங்கள். வாழ்க்கையில் குற்றஉணர்வின்றி மகிழுங்கள். ஏனென்றால், வெற்றி மற்றும் அதிர்ஷ்டதிற்கான அலைகள் உங்களது வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கின்றன.
ரிஷபம் ராசிபலன்
சில உறவுகளை சிறந்தவையாக மாற்ற அதிக சிரத்தை தேவைப்படுகிறது. அதை முதலில் நினைவிற் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் நடந்த வேதனையான விஷயங்களை மறக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அதை ஏன் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. நண்பா! நீ ஒரு உண்மையான போர்வீரன். அனைத்தும் விரைவில் சிறப்பாக அமையும். சற்று பொறுத்திரு. பல விஷயங்கள் உங்கள் நம்பிக்கையை குறைத்து, ஓர் பாதுகாப்பற்ற தன்மையை உங்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளன. உங்களை நீங்களே நம்பிய அந்த நிலைக்கு இப்போது என்னவாயிற்று? இதற்குரிய பதில் உங்களிடம் தான் உள்ளது. இன்றே நீங்கள் அதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம் ராசிபலன்
நண்பர்களுடன் வாழ்க்கையை அனுபவியுங்கள். இன்று, உங்களை சற்று தளர்த்திக் கொள்ளுங்கள். அது உங்கள் மனதை அமைதியாக வைக்க உதவும். உங்களிடம் உள்ள கடன் அட்டைகள் மூலம் துணிச்சலாகப் பொருட்களை வாங்கிக் கொள்வது எளிதாகிவிட்டது. ஆனால், இவ்வாறு பொருட்களை வாங்குவது, உங்கள் வரவு செலவைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கடன் அட்டை அறிக்கை, உங்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு அதில் உள்ள தவறுகளைச் சரி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த பொறுப்பற்ற செலவு பழக்கத்தைத் தூண்டும் நபர்கள் அல்லது சூழ்நிலைகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இவற்றிற்கு ‘இல்லை’ என்று சொல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை.
கடகம் ராசிபலன்
சமீபத்தில், அனைத்துவிதமான மன அழுத்தங்களும், பதட்டமும் சேர்ந்து உங்கள் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் ஒவ்வாமை அல்லது நாட்பட்ட நோயினை எதிர்த்துப் போராடுபவராக இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய முடிவுசெய்ய இது சரியான தருணமாகும். நேர்மறையானவற்றை சொல்வதற்கு இயலாத நபர்களிடமிருந்து விலகியே இருங்கள். உங்களைச் சுற்றிலுமுள்ள நபர்கள் உங்களது மனதிற்கு எதிர்மறையானவற்றையே அளித்துள்ளனர். இன்று, ஆகச்சிறந்த முடிவுகளை எடுக்கும் முன்பு, உங்கள் உள்ளுணர்வுகளை முன்பை விட தற்போது அதிகம் நம்ப வேண்டும்.
சிம்மம் ராசிபலன்
மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களை ஆட்கொள்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் அதிகமாகச் சிந்திக்க முயல்கிறீர்கள். அதிகமாகச் சிந்திக்க முயலும் போது, சிந்தனைக்கும், கவனம் செலுத்துவதற்கும் இடையேயான வரைமுறைகள் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆனால், உங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். உங்களை விரும்பும் ஒருவர், இன்று உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார். இன்று அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள்.
கன்னி ராசிபலன்
வாழ்க்கை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விஷயத்தில், நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நீங்கள் செயல்படுத்த முடிவு செய்துள்ள உங்கள் எண்ணங்களில் சில தந்திரங்கள் உள்ளன. உங்கள் முடிவுக்கு உங்களைப் பாராட்டுங்கள். ஒரு சிட்டிகை உப்பைப் போட்டுக் கரைப்பது போன்று விமர்சனங்களைக் ஏற்றுக்கொள்ளுங்கள். இன்று, யாரோ ஒருவர் உடல்நிலை சரியில்லாததால், உங்களிடமிருந்து அன்பான அழைப்பை எதிர்பார்க்கிறார். இதனால், காத்திருக்க வேண்டாம். இன்று, அவர்களுடன் பேசி அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்!
துலாம் ராசிபலன்
ஒரு வாரத்திற்குள் நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியலில், உபயோகமான ஆக்கத்திறன்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும். நேரம் குறைவாகவே உள்ளது. எனவே, ஒவ்வொரு நொடிக்கும் நீங்கள் கணக்கு சொல்லியே ஆகவேண்டும். அற்பத்தனமான செயல்களில் ஈடுபட்டு உங்களது கணநேரத்தைக் கூட வீணாக்காதீர்கள். இங்கே, சோம்பேறித்தனத்திற்கே இடமில்லை. எனவே, நீங்கள் மனக்குழப்பத்தில் இருக்கும் போது, ஏதோ ஒன்று அத்தியாவசமாக தேவைப்படுவது போல் உணர்ந்து, அதற்கேற்ப உங்கள் மனதை மாற்றி, வித்தியாசமாக ஏதாவது செய்யுங்கள். நீங்கள் இன்று கொஞ்சம் அன்பில்லாத நிலையினை உணர்கிறீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இது மட்டுமே நிரந்தரமான உண்மை நிலை அல்ல. அன்பு என்பது எப்போதுமே ஒரு தொடுதல் சார்ந்த உணர்வினை மட்டும் கொண்டது கிடையாது என்பதை உணருங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
நீங்கள் போற்றுதலுக்குரிய ஒருவருடன் சில அர்த்தமுள்ள சம்பாஷணைகளில் ஈடுபடுங்கள். இது இன்றைய விஷயங்களை நிச்சயமாக புதிய பரிமாணத்தில் அணுக உதவும். உங்களது உள்ளார்ந்த அமைதியும், நட்பு பாராட்டுதலும், சில நேர்மையற்ற நபர்களால் அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நீங்கள் வெளிப்படுத்த தயங்குவதால், நீங்கள் ஒரு அப்பாவியாகவும், திறனற்றவராகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளீர்கள். இன்று, உங்கள் உடல்நலம் குறித்து கவனமாக இருங்கள். உடற்பயிற்சி அல்லது உணவுக்கட்டுபாட்டில் கவனமாக இருங்கள். இன்று, உங்கள் உடல் நலனைக் கூர்ந்து கவனித்துக் கொள்ள இது ஒரு நல்ல தருணமாக இருக்கும்.
தனுசு ராசிபலன்
கெட்ட நண்பர்கள் உங்களுக்கு அதிக கஷ்டத்தைக் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கையிலிருந்து தவறானவிஷயங்களைக்களைந்து விட வேண்டிய நேரம் இது. உங்கள் லட்சியத்தை அடைய வேண்டும். நீங்கள் எதிர்கொள்ளும் தடைகளைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம். குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். சமூகக் கூட்டம் மற்றும் வெளியில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் பயனடையலாம். சரியானதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் வேலையில், உங்களுக்குள்ளவிருப்பங்களைஆய்வு செய்யுங்கள். உங்கள் பணியில் ஒரு வரையறுக்கப்பட்ட பாதையை உருவாக்கவும்.
மகரம் ராசிபலன்
கூட்டத்தில் தனியாக இருப்பது போல உணர்கிறீர்களா? அது நீங்கள் வாழ்க்கையில் சமாளிக்க வேண்டிய ஒன்று தான். புதிய நட்பைப் பெற நீங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். இதனால், உங்களுக்குத் தடுமாற்றம் ஏற்படலாம். பரபரப்பான மற்றும் மகிழ்ச்சியான நடவடிக்கைகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. இந்த நாளில், உங்களுக்காக வரிசையாகக் காத்திருக்கும் இன்பமான செயல்களை நிதானமாக அனுபவியுங்கள். மோசமான எண்ணங்களை விட்டுவிட்டு, ஆனந்தத்தைச் சிறந்த முறையில் அனுபவியுங்கள்.
கும்பம் ராசிபலன்
உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் இன்று உங்களுக்குச் சிறப்புக் கவனம் தேவைப்படும். உங்கள் சொந்த பிரச்சினைகளைக் கையாளாமல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். மன அழுத்தம் உங்களை உயிருடன் கொலை செய்யும் முன்பு, உங்கள் உள் மனதில் உண்டாகும் தீய எண்ணங்களைக் கட்டுப்படுத்திச் சமாளிக்க வேண்டும். உங்களது நிதி நிலை பெரிய சிக்கலில் உள்ளது. ஆனால், இந்த சிக்கல் விரைவில் பாதுகாப்பான நிலைக்கு வந்து விடும் என்று உங்கள் மனதை உற்சாகப்படுத்துங்கள்.
மீனம் ராசிபலன்
உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றிட முடிவு செய்யுங்கள். உங்கள் மனத்தை நேர்மறையான விஷயங்களில் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். உங்கள்சவால்களைப்புத்திசாலித்தனமாகத்தேர்வு செய்யுங்கள். உங்கள் நேரத்திற்கு மதிப்பு இல்லாத விஷயங்களுக்குப் பின்னால், உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தில் வரும் புதிய வாய்ப்புகளுக்கு இன்னும் காத்திருக்கிறது. இந்த வாய்ப்புகளை அடைய இன்றுஉங்களுக்குக்கிடைக்கும் நேர்மறை ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
No comments