அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தருண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் வேலைக்காக கலிபோர்னியர் என்ற நிலையில் அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தருண் ராஜ் நேற்று முன்தினம் காலை தன் மனைவி மற்றும் 2 மகன்களுடன் காரில் சென்றார்.அப்போது அவர்கள் சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் தருண்ராஜ், அவருடைய மனைவி மற்றும் 2 மகன்கள் என 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அதி வேகமாக சென்றது தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Sunday, April 28, 2024
கார் விபத்து..... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment