அக்டோபரில் வெளியாகிறது ‘வேட்டையன்’ - MAKKAL NERAM

Breaking

Sunday, April 7, 2024

அக்டோபரில் வெளியாகிறது ‘வேட்டையன்’

 

ஜெயிலர்’, ‘லால் சலாம்’ படங்களைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘வேட்டையன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.வேட்டையன்' திரைப்படத்தின் டீசர் ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தூத்துக்குடி, சென்னை, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்த முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது.இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள லைகா நிறுவனம், “ குறி வெச்சாச்சு. வேட்டையன் இந்த அக்டோபரில் திரையரங்குகளில் களமிறங்க தயாராகிவிட்டார். இரையை விரட்ட தயாராகுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment