மதுரை அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் ஆதரவு நடிகர், நடிகைகள் ஏராளமானோர் மதுரையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று திரைப்பட நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பகுதியில் கடைகள், பொதுஇடங்களில் பொதுமக்களிடம் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் பலரும் அவருடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காய்கறி, பழக்கடைகளில் வியாபாரிகளிடம் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு துண்டுப் பிரசுரங்களை வழங்கி கேட்டுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘மதுரை என்னுடைய சொந்த ஊர். ஆனால், இதுவரை யாருக்காகவும் மதுரைக்கு பிரச்சாரத்துக்கு வந்ததில்லை. எனது உடன்பிறவா சகோதரரான அதிமுக வேட்பாளர் சரவணனுக்காக முதல்முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்தேன்.
அவர் உறுதியாக வெற்றி பெறுவார். படித்தவர், மருத்துவர், சொந்த ஊர்க்காரர் என்பதால் நிச்சயமாக வெற்றி அடைவார். தொடர்ந்து ஏழை மக்களுக்கு நல்லது செய்வார். அவர் வென்றால் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர முயற்சி எடுப்பார். இலவசமாக மக்களுக்கு மருத்துவம் பார்ப்பார். எனவே, ஏழை, எளிய மக்கள், கண்ணை மூடிக் கொண்டு அவருக்கு வாக்களிக்கலாம்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment