திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட திருப்பாலைவனத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகை உடனுறை ஸ்ரீ திருப்பாலீசுவரர் திருக்கோவில் உள்ளது. தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து வெளியேறிய கொடும் விஷத்தை சிவபெருமான் தனது தொண்டையில் அடக்கி முக்கோடி தேவர்களை காத்தருளிய புராணத்துடன் தொடர்புடைய இக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகின்ற 2026 ஆங்கில தேதி ஜனவரி 30, தமிழ் தேதி தை 16 அன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மகா கும்பாபிஷேகத்திற்கான பந்தக்கால் நடும் விழாவினை சிவாச்சாரியார் விஸ்வபதி சிறப்பாக நடத்தினார். இதில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கரன் மற்றும் ஆலய நிர்வாகிகள் மரபுத் தலைவர் துரை பூமிநாதன் டி ஜெ ஆறுமுகம் ஹரி ஜோதிஸ்வரன் மதி இ ஆர் டி தமிழ்ச்செல்வன் A T சந்தனம் ரமேஷ் சுந்தரமூர்த்தி ஏ கே எஸ் சம்பத் அபிராமன் ஜெயம்ரமேஷ் இலூபாக்கம் ரவி சுதாகர் தரணி வைரவன் குப்பம் ஜெயச்சந்திரன் கோபி அதிமுக ஒன்றிய செயலாளர் வினோத் முன்னாள் சேர்மன் ரவி கட்டத்தொட்டி மதன் நாவமணி பாஸ்கர் கஜா பெதியாரங்குளம் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



0 Comments