• Breaking News

    தரையிறங்கும் போது திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்...... உயிர் தப்பிய சிவசேனா தலைவர்......( வீடியோ )

     

    மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட்டில் உள்ள மஹாத் நகரில் சிவசேனா துணைத் தலைவர் சுஷ்மா அந்தாரே இன்று பயணிக்க இருந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அந்த ஹெலிகாப்டர் சுழன்று, தடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது அங்கு பலத்த சப்தத்துடன், புழுதிகளும் பறந்தன. ஹெலிகாப்டரின் விமானி அதிர்ஷ்டவசமாக கீழே குதித்து உயிர் தப்பினார்.இந்த விபத்தில் வெள்ளை, நீல நிறம் கொண்ட ஹெலிகாப்டர் நொருங்கியது. 

    இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறையும், மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தான் பயணிக்க இருந்த ஹெலிகாப்டர் தன் கண்முன்னே சில நொடிகளில் விழுந்து நொருங்கியதைப் பார்த்து சுஷ்மா அந்தாரே கடும் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவர் அதே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க கார் மூலம் புறப்பட்டுச் சென்றார். சுஷ்மா அந்தாரே பயணிக்க இருந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பின்னர் அவர் அதே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க கார் மூலம் புறப்பட்டுச் சென்றார். சுஷ்மா அந்தாரே பயணிக்க இருந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோ பார்க்க க்ளிக் செய்யவும்

    No comments