• Breaking News

    ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு....

     

    டெல்லியில் இருந்து லடாக் நோக்கி ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று இன்று மதியம் புறப்பட்டது. இதில் 135 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதாக கூறப்படுகிறது. 

    இதனால் பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க விமானிகள் அனுமதி கோரியுள்ளனர்.விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஸ்பைஸ் ஜெட் விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து 135 பயணிகளும் உடனடியாக கீழே இறக்கப்பட்டு, விமானத்தை பரிசோதிக்கும் பணிகள் நடைபெற்றது. விமானத்தை பரிசோதித்த வல்லுநர்கள், விமானத்தில் பெரிய அளவில் சேதம் இல்லை என தெரிவித்துள்ளனர். 

    இருப்பினும் வேறு ஏதேனும் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.இதையடுத்து 135 பயணிகளும் வேறு விமானம் மூலமாக லடாக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

    கடந்த வாரம் துபாயிலிருந்து மும்பை வந்த போயிங் 777 விமானம் ஒன்று பிளமிங்கோ பறவைகள் மீது மோதியது. இதில் 39 பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்து, அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு விமானத்தில் பறவை மோதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    No comments