நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் வசித்து வந்தவர் தனபால். இவர் நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண காப்பக பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஊட்டியில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர், இது குறித்து ஊட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த இன்ஸ்பெக்டர் தனபால் இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
0 Comments