மேஷம் ராசிபலன்
மந்தமான தன்மை உங்களை ஆட்கொண்டுள்ளது. அது உங்கள் செயல்களைப் பாதிக்கும். இடைவிடாமல் வேலை செய்வது உங்களைச் சோர்வடையச் செய்துள்ளது. கற்பனைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் எண்ணங்களின் பெரும் சுணக்கம் இருப்பதைப் போலவும், மந்தமானதாகவும் உணரலாம். உங்கள் அனுபவத்தை மீண்டும் அடைய உங்களுக்கு என்ன தேவை. இதற்காக உற்சாகமூட்டும் ஒன்றைச் செய்யுங்கள் அல்லது உங்கள் கற்பனைகளில் ஆழ்ந்து யோசியுங்கள். இது உங்களுக்கு இப்போது அவசியம் தேவை. இதன் மூலம் நீங்கள் அதிக பயன் பெறுவீர்கள்.
ரிஷபம் ராசிபலன்
இன்று, வாழ்நாள் முழுவதும் நீங்கள் நன்றாக விரும்பும் என கருதும் நபர்களோடு அணிசேருங்கள். இது உங்கள் புதிய முயற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது உங்கள் வாழ்க்கை வேறு பாதையை நோக்கி பயணிக்க உதவும். தனிநபர்கள் மற்றும் அவர் சார்ந்த சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான குணங்களைக் தெரிந்து கொள்ள உங்கள் மனதைத் திறந்திடுங்கள். மற்றவர் மீது பழிபோடுவதைத் தவிர்த்து, உங்களுக்கு அவசியமில்லா நபர்களிடம் கூட, கரிசனையோடு இருங்கள். இலட்சியத்தோடு பணியினைச் செய்வதற்கு, உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து புனரமைப்பு செய்யுங்கள்.
மிதுனம் ராசிபலன்
பலவிதமான பணிகள் உங்களது அர்ப்பணிப்புகளைத் தடுத்து நிறுத்துகின்றன. அவற்றிலிருந்து நீங்கள் விடுபட வேண்டிய நேரம் இதுவாகும். சிறிது நேரம் தியானம் செய்து, உங்கள் உண்மையானதேவையைப்புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பொருளாதார நிலை குறித்து அதிகம் கவலைப்படாதீர்கள். இருந்தாலும், பொருளாதார நிலை குறித்து கொஞ்சம் கவனமாக இருங்கள். நல்ல நேரம் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள், மற்றவிஷயங்களைத்தவிர்த்து விடுங்கள். உங்களது நல்ல மற்றும் கெட்ட சந்தர்பங்களில், உங்களுடன் இருப்பவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.
கடகம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கையின் அதிகமான விஷயங்களைக் குறித்து, நீங்கள் உள்ளார்ந்த அக்கறையுடையவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய முதலீடும், சரியான திசையில் செல்வதற்கு உதவும் ஒரு படியாகும். மேலும், இது உங்களின் இன்னொரு அங்கம் ஆகும். ஆனாலும், இது நிறைய பேருக்குத் தெரியாது. உங்களுக்கு அதிகமான அழுத்தம் இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தாலும் கூட, கடினமான சூழ்நிலைகளில், நீங்கள் சிந்தித்து அமைதியைப் பேணவேண்டும்.
சிம்மம் ராசிபலன்
உடனடி கவனம் தேவைப்படும் வகையில், உங்களது வீட்டில் சில விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற சில விஷயங்கள் மிக மோசமான நிலைக்குத் திருப்புவதற்கு முன்பு, நீங்கள் அவற்றை விரைவாகச் சமாளிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. ஒரு சிறந்த பந்தம் பற்றிய உங்களது புரிதலானது நடைமுறைக்கு அப்பால் உள்ளது. உண்மைக்குப் புறம்பாக இருப்பது, உங்களை விரக்தியடையச் செய்யும். இது உண்மையான அன்பில் நம்பிக்கையை இழக்கச்செய்யும்.
கன்னி ராசிபலன்
சவால்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எனவே, அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் சரியான தருணம் இதுவாகும். தைரியமாக இருங்கள். மேலும், தீர்வுகளைக் கண்டறிய முயலுங்கள். இது உங்களுக்கு ஏன் நேர்ந்தது என அங்கலாய்த்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை! எனவே, இன்று முதல், சரியான அளவில் உடற்பயிற்சி செய்து, ஆரோக்யமான உணவை உட்கொள்ளுங்கள். அச்சமின்றி இருங்கள். உங்களது முதுகுக்குப் பின்னால், புறம்கூறுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்படாதிருங்கள். விமர்சனங்களை எளிதான மனதுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
துலாம் ராசிபலன்
இன்று, நீங்கள் கவனம் மற்றும் ஊக்கத்துடன் இருப்பீர்கள். சில கவனச்சிதறல்களால், உங்களது இலக்கை நோக்கி நீங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், இனி அவ்வாறு நடக்காது. நீங்கள் உங்கள் இலக்கை நோக்கிச் செல்ல தேவையான முன்னுரிமை கொடுக்க கற்றுக்கொள்வீர்கள். மேலும், அற்பமான விஷயங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். சரியான பாதையில் செல்லுங்கள். மேலும், சோதனைகளை எதிர்க்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். கவலைப்பட வேண்டாம். உங்கள் கடின உழைப்புக்கு விரைவில் பலன் கிடைக்கும். புதிய கூட்டணி, நண்பர்கள் இன்று உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களது நண்பர்களின் திறன்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கையில், இந்த பணியைத் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று நீங்கள் உணரலாம். இது உங்களுக்கு மன அழுத்தத்தை மட்டுமே ஏற்படுத்தும். இதற்காகக் கவலை கொள்ள வேண்டாம். இந்த நிலை விரைவில் மாறும். நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க நீங்கள் முயல்கிறீர்கள், இது நீண்ட நாட்களுக்கு உதவாது. யதார்த்தத்தைத் தைரியமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும். உங்கள் வாழ்க்கையில் சில புதிய விஷயங்களை முயற்சியுங்கள். இந்த முயற்சிகளைச் சோதிக்க இது ஒரு நல்ல நாளாக உங்களுக்கு அமையும். இந்த முயற்சிகளின் பலனைப் பற்றி கவலை கொள்ள வேண்டும், தொடர்ந்து பணியைச் செய்து கொண்டே இருங்கள்.
தனுசு ராசிபலன்
ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துங்கள். உங்கள் பணியில் நிலையான முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் கடின உழைப்பு விரைவில் பாராட்டப்படும். உங்கள் மேல் அதிக நம்பிக்கை வையுங்கள். உங்கள் திறன்கள் மீது நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், வாழ்க்கையின் சிக்கல்களைச் சிறப்பாகச் சமாளிக்க முடியும். எந்தவொரு குறிப்பிட்ட விஷயத்திற்காகவும் உங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம். வெளிக்காட்ட உங்களிடம் நிறையத் திறமைகள் உள்ளன். எனவே புதிய எல்லைகளை நோக்கி பணியாற்றுங்கள்.
மகரம் ராசிபலன்
உங்களது எண்ணங்கள் உங்கள் செயல்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்களது வழியில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமான வாய்ப்பு அமைய உள்ளது. அது கைநழுவி செல்லும் முன்பு, அதை இறுகப்பற்றுங்கள். இன்று, உங்களது கருத்தை தெரிவிக்க வெட்கப்படாதீர்கள். தெளிவாகச் சொல்லப்போனால், உங்களிடம் சில நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளன. எனவே, நம்பிக்கையோடு இருங்கள், முன்னேறுங்கள். பல்நோக்குப் பணிகளை செய்வதற்கான உங்களது திறன் இன்று பெரிதும் பயன்படும். மேலும், அதற்காக நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.
கும்பம் ராசிபலன்
சில விஷயங்கள் உங்களை வருத்தத்தில் ஆழ்த்தும். அந்த விஷயங்கள் உங்களுக்குள் தொடர்ந்து இருக்கின்றனவா? நீங்கள் இன்னும் அவற்றை உண்மையாக்க விரும்புகிறீர்களா? இன்று, உங்கள் உள்ளுணர்வு என்ன பேசுகிறது என்பதைக் கவனியுங்கள். அவர்கள்உங்களுக்குத்துரோகம் செய்ய மாட்டார்கள். உங்கள் எண்ணங்களுக்கு உங்கள் மனம்எப்படித்தீர்வுகளைத் தருகிறது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நீங்களே அதிக பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். தோல்விகளை ஏற்காதீர்கள். எழுச்சி கொண்டு வேலை செய்யுங்கள் அதிர்ஷ்டம் வெகு தொலைவில் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.
மீனம் ராசிபலன்
உங்கள்பிரச்சனையைத்தீர்க்கும் திறன் இன்றுசிறப்பாகச்செயல்படத் தொடங்கும். உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். பணியில் உங்களது ஆர்வம் உச்சத்தில் உள்ளது. உங்கள் காதல் ஆர்வத்தைப் பற்றி மேலும் அறிய இந்த நாளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்கள் மனத்தை முழுமையாக ஈடுபடுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயமாக வரும். இந்த வாரம் உங்கள் படைப்பாற்றலைஉச்சத்திற்குக்கொண்டு செல்லலும்.
No comments:
Post a Comment