நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த மேலவாழக்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த பாலமுனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து லெட்சுமி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று பூர்ணாஹூதி நடைப்பெற்றது.
இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று கெடம் புறப்பாடு நடைப்பெற்றது. மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியர்கள் கடத்தை சுமத்து வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பால முனீஸ்வரர்க்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் . இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்ட நிருபர்
க.சக்கரவர்த்தி
No comments:
Post a Comment