இன்றைய ராசிபலன் 27-06-2024
மேஷம் ராசிபலன்
பணம் மிகவும் முக்கியம். ஆனால், நீங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது பணத்தை விட முக்கியமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள். ஆனால், உங்களைப் பயன்படுத்திக் கொள்ளமுயல்பவர்களிடமிருந்துவிலகியே இருங்கள். இதுபற்றி, அவ்வப்போது சிந்திக்க வேண்டாம். அதிகப்படியான சிந்தனையில் கவனம் செலுத்துவதற்கு முன்பு, அதற்கானதிட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று உங்கள் உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற அன்புக்குரியவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு அவர்கள் உங்களுக்கு உதவியிருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரம் இது.
ரிஷபம் ராசிபலன்
பல விஷயங்கள் நடத்திருக்கலாம், ஆனாலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டிய தேவை உங்களுக்கு உள்ளது. உண்மையில் உங்களுடன் இணைந்திருந்த நபர், சில காரணத்திற்காக இனி உங்கள் வாழ்க்கையில் இணைந்திருக்கப் போவதில்லை. சமீப காலமாக உங்களைப் பாதித்து வரும் மன அழுத்தம் உங்கள் உடல் நிலையைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது மன அழுத்தத்திலிருந்து வெளியே வர உங்களுக்கு உதவும்.
மிதுனம் ராசிபலன்
துரதிர்ஷ்டவசமான செயல்கள் உங்கள் பக்கமாக நகரும் என்பதால் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நேர்மறையாக இருங்கள், முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதற்கேற்ப முடிவு செய்யுங்கள். ஆனால், தேவையற்ற உணர்ச்சிகளை மறைத்து வைத்திருங்கள், ஏனென்றால் நீங்கள் இப்போது செய்யும் எந்தவொரு செயலையும் அவை தடுத்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள், அவற்றை நோக்கிச் செயல்படுங்கள். சுயநலக்காரர்களிடம் பேசுவதை விட்டு விடுங்கள். ஏனெனில், அவை எதிர்மறை மற்றும் சோகத்தைத் தவிர வேறொன்றையும் ஏற்படுத்தாது.
கடகம் ராசிபலன்
நீங்கள் வழக்கமாகவே, புத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் இருப்பீர்கள், ஆனால், இன்று உங்கள் மனதின் செயல்பாடு தடை கொண்டதாகவும், தெளிவற்றதாகவும் தெரிகிறது. மனக்கிளர்ச்சி நிறைந்த பாதையில் விலகி இருங்கள். இல்லையெனில், இது வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து, உங்களிடமிருந்து தடம் மாறச் செய்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் சமூக தொடர்புகள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் எந்த நிதி முடிவுகளையும் முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் உயரத்தில் பறக்க அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள். இது உங்கள் ஆத்திரத்திற்கும், உணர்ச்சிகரமான உணர்ச்சிகளுக்கும் இடையே ஒரு வடிகாலாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இன்றைய விஷயங்களை நேர்மறையைப் பார்க்க வேண்டும், ஏனென்றால், உங்களது மந்தமான நாளை, நல்ல முறையில் மாற்ற இது உதவும். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொள்ளும் கலையில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். நல்ல அர்த்தமுள்ள நபர்கள் உங்களிடம் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.
கன்னி ராசிபலன்
நீங்கள் மிகவும் சிறந்தவர், எனவே உங்களைப் பற்றிக் கவலைப்பட்டு மனம் தளர வேண்டாம். உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் தைரியமானவர், புத்திசாலி, திறமையானவர். நேர்மறை சொற்களைப் பேசுங்கள் மற்றும் உங்கள் முகத்தைப் புன்னகையுடன் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்கள் குறிக்கோள்கள் சற்று தெளிவில்லாமல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். உங்களை ஆக்கிரமித்துள்ள எதிர்மறை எண்ணங்களைப் போக்கத் தியானத்தில் ஈடுபடுங்கள்.
துலாம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும், நன்றியுடன் இருங்கள். தேவைப்படுபவர்களிடம் பரிவு காட்ட மறக்காதீர்கள். நல்ல அதிர்வுகளுடன் இந்த நாளை ஏன் தொடங்கக்கூடாது? உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு மாலை நேரத்தைத் திட்டமிடலாம். இன்று, அமைதியாக இருப்பது மற்றும் உங்கள் ஆத்ம தோழருடன் நேரத்தைச் செலவிடுவது உங்களுக்கு நிறைய அமைதியைத் தரும். உங்களை விரும்புபவர்களுடன் அன்புடன் இருக்க நீங்கள் விலை உயர்ந்த இடத்திற்குச் செல்ல தேவையில்லை என்பதற்கு இதுவே போதுமான சான்று. உங்களுடன் தொடர்பில் இல்லாத நண்பர் அல்லது நீங்கள் விரும்புபவரைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். இது நிச்சயமாக அவர்களின் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும்.
விருச்சிகம் ராசிபலன்
கடந்த காலத்தில், உங்களது கருத்துக்களை நம்புவதில் சுணக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இன்று சில சுவாரஸ்யமான யோசனைகள் உங்களது எண்ண ஓட்டத்தில் உதித்துள்ளன. இன்று, அவற்றை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். நீங்கள் என்ன செயல்களைச் செய்கிறீர்களோ, அதில் நீங்கள் மகிழ்ச்சியைக் காணவேண்டும். இது உங்கள் மனச்சுமையை குறைப்பதோடல்லாமல், புத்தாக்க சிந்தனைகளை உங்களது அட்டவணை நிரலில் கொண்டுவர உதவும். உங்களது படைப்பாற்றல் உச்சம் பெற்றுள்ளது. மேலும், மந்தமான இடத்தில் கூட அழகியலை உருவாக்கும் சக்தி உங்களுக்கு உண்மையிலேயே இருக்கிறது.
தனுசு ராசிபலன்
இந்த நாள், வாழ்நாள் முழுவதும் நீங்கள் போற்றும் சில அன்பான நினைவுகளை உங்களுக்குத் தரும். உங்கள் செலவினங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். செலவுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களிடமுள்ள நிதி, உங்களுக்குச் சிறந்த நாட்களைக் கொடுக்கும். ஒரு நெருங்கிய நண்பர் உங்களுடனிருந்து உங்களை உற்சாகப்படுத்துவார். வாழ்க்கையையும் இந்த சிறப்பு நண்பரையும் பாராட்ட இன்று நேரம் ஒதுக்குங்கள்.
மகரம் ராசிபலன்
நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதன் மூலம், அதுவும் இடைவெளி இல்லாமல் உழைப்பதன் மூலம், உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள். அதற்கு, யாருடைய ஒப்புதலும் உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு நீங்கள் மட்டுமே போட்டியாளர். அவ்வப்போது, ஒரு முறை ஓய்வு எடுப்பதற்கு நினைவிற் கொள்ளுங்கள். மிகவும் கஷ்டத்தில் இருக்கும் போது கூட, நீங்கள் நல்லது செய்யவே விரும்புகிறீர்கள். முன்னேறுங்கள். நீங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். மேலும், இது எதிர்மறை சிந்தனையிலிருந்து உங்கள் மனதை மாற்றிவிடும்.
கும்பம் ராசிபலன்
உங்களது நிதிநிலை சீராக இல்லை. இந்த மாதத்திற்குள்ளாக நிலைமை சரியாகும் என்று நம்புகிறீர்கள். உங்களது பணம் செலவிடும் பழக்க வழக்கங்களைக் குறித்து கவனமாக இருங்கள். ஆடம்பரத்திற்கான உங்களது நாட்டத்திற்கு இன்று உகந்த நாளால்ல. பயனுள்ள பணிகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும், இன்று, தவறான தகவல்தொடர்புகள் அல்லது தவறான புரிதல்களை பற்றி கவலை கொள்ளாதீர்கள். உங்கள் நோக்கம் யாதெனில், சந்தேகங்கள் அல்லது அச்சங்கள் எப்போது, எப்படி ஏற்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துவதே ஆகும்.
மீனம் ராசிபலன்
உங்களைச் சுற்றிலும் நிறைய வேடிக்கையான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. உங்கள் முனங்கலை நிறுத்திவிட்டு, ஏதாவது ஒரு செயலை உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் ஆரம்பியுங்கள். அவ்வாறு, நீங்கள் சரியாக செய்யத் துவங்கும் போது, உங்களுக்கு ஏற்படும் தொடக்கச் சிக்கல் குறைந்துவிடும். இன்று, யாரவது ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். இது அன்பைத் திருப்பி செலுத்துவதற்கும், உங்களது கரிசனையை காட்டுவதற்கும் சிறந்த வழியாகும். உங்களது செயல்களில் சுணக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் உள்ளன. சில மோசமான வாழ்க்கைமுறை தெரிவுகள் மற்றும் ஒரு சில தீங்குவிளைவிக்கும் நபர்களிடமிருந்து உங்கள் வாழ்க்கையை விடுபட செய்யவேண்டும்.
No comments