மயிலாடுதுறை கலெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி.... அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..... - MAKKAL NERAM

Breaking

Thursday, June 27, 2024

மயிலாடுதுறை கலெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி.... அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.....

 

மயிலாடுதுறை கலெக்டராக மகாபாரதி பதவி வகித்து வருகிறார் இவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மதியம் முகாமிற்கு சென்றுள்ளார் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து அவரை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக  சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இரவு பகல் பாராது ஓய்வின்றி மாவட்ட வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும்  பாடுபடும் கலெக்டர் நலமுடன் திரும்ப அரசு ஊழியர்களும் பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment