அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் அர்ச்சனை சீட்டில் முறைக்கேடு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் புகழ்பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வீரமாகாளியம்மனை தரிசிக்க தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அர்ச்சனை சீட்டு வழங்கும் இடத்தில் ஜம்முனு ஒருவர் இருப்பார். அருகில் கம்ப்யூட்டர் இருக்காது ஆனால் கம்ப்யூட்டர் அர்ச்சனை சீட்டு கொடுப்பார். அதுவும் தியேட்டர் பார்க்கிங் ரசீது போல் மொத்தமாக வைத்துருப்பார்.
சரி விசயத்திற்கு வருவோம் பக்தர் ஒருவர் 14-06-2024 அன்று வீரமாகளியம்மனை தரிசிக்க அர்ச்சனையுடன் கோவிலுக்குள் சென்றுள்ளார். அர்ச்சனை சீட்டும் வாங்கியுள்ளார். வாங்கிய பிறகு அர்ச்சனை சீட்டை எதார்த்தமாக பார்த்த போது அதிர்ச்சியாகியுள்ளார். இவர் தரிசிக்க சென்றதோ 14-06-2024 ஆனால் அர்ச்சனை சீட்டில் உள்ள தேதியோ 13-06-2024. இந்த தேதி எப்படி மாறியது....? முதல் நாள் தேதி உள்ள அர்ச்சனை சீட்டு மறுநாள் வழங்கப்பட்து ஏன்...? இது கவனக்குறைவால் நடைபெற்றதா...? அல்லது மக்கள் பணத்தை ஆட்டைய போட நடைபெற்றதா...? இல்லை பேப்பர் ரோல் மிச்சப்படுத்த இப்படி செய்தார்களா....? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
![]() |
தேதி மாற்றி வழங்கிய அர்ச்சனை சீட்டு |
இது மட்டுமல்லாமல் வீரமாகளியம்மனை தரிசித்து விட்டு அர்ச்சனையை கேட்டால் அங்குள்ள அர்ச்சகர்கள் ரூ.20 கட்டாயமாக வசூல் செய்கிறார்கள். ரூ.10 கொடுதாலும் வாங்குவதில்லை. இந்த ரூ.20 எதற்கு....? யாருக்கு.....? பிறகு ஏன் அர்ச்சனை சீட்டு..? இப்படி அர்ச்சனை சீட்டு விவகாரத்தில் கோவில் நிர்வாகம் அரசை ஏமாற்றுகிறதா அல்லது மக்களை ஏமாற்றுகிறதா என வீரமாகாளிக்கே வெளிச்சம். அர்ச்சனை சீட்டும் வழங்கும் போது உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்து அர்ச்சனை ரசீது அதே நேரத்தில் வழங்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இனிமேலாவது அர்ச்சனை சீட்டு வழங்குவது முறைபடுத்துவார்களா இல்லை தியேட்டர் பார்கிங் ரசீது போல் தான் தொடர்வார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
No comments