இன்று தமிழக முழுவதும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் கம்பத்தில் உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் துறையின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளை இணைந்து மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியானது தேனி மதுவிலக்கு டிஎஸ்பி ரவி சக்கரவர்த்தி அவர்களின் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் சூர்யா திலகராணி தலைமையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர் பேரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது.
இந்தப் பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், மதுவிலக்கு காவல் துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் என ஏராளமான கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களை முடக்கமிட்டு சென்றனர்.
No comments:
Post a Comment