• Breaking News

    நெல்லை ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

     

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய் உதவியுடன் நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.

    No comments