சோழவரம் ஒன்றியம் பண்டி காவனூர் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம். விமர்சியாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டி காவனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லட்சுமி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் தற்போது கோவில் முக்கிய நிர்வாகிகள் பக்தர்கள் நிதி உதவியுடன் பல லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.
இதனை அடுத்து நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக லட்சுமி அம்மனுக்கு மகா கும்பாபி ஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலருக்கு சால்வை அணிவித்து கலசங்கள் வழங்கப்பட்டன. மேலும் நன்கொ டை வழங்கிய பக்தர்களுக்கும் கலசங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி மற்றும் கிராம நிர்வாக குழு மற்றும் விழா குழுவி னர்களான பண்டி காவனூர் ஊரா ட்சி மன்ற தலைவர் கே.ஜே.ஆர். சதீஷ்குமார், ஜே.ஆர்.பி. பொன்னு ரங்கம், ஜி.வி.ஆர். விநாயகம், எ. பொன்னுசாமி, டி.ஆனந்தன், எம். சீனிவாசன், பி.மகேந்திரன், கே. ஞானசேகர், எம்.கோபிநாதன், பி. முத்தரசன் என்கின்ற அப்பு, எம். அருண், பி.செல்வம், எஸ், கார்த்தி கேயன், இ.நந்தகோபால், பி. சுதா கர், எஸ்.சபரி, எஸ்.வீரமணி, வி. பிரபு, ஆர்.மணி, உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் சுற்று பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
No comments