GM செஸ் அகாடமி சார்பில் செம்பாக்கம் ஆல்பா இன்டர் நேஷ்னல் பள்ளியில் 23.06.2024 அன்று மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் GM அகாடமி செயலாளர் மாசிலாமணி ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, கன்யாகுமரி, கடலூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, வேலூர் என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 600 பேர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் எட்டு , 10 , 13 , 25 வயதினருக்கான இப் போட்டிகள் ஆறு சுற்றுகளாக நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்று முதல் 25 இடங்களை பிடித்த 160 பேர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் 3வது மண்டல குழு தலைவர் ஜெய பிரதீப் சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக செயலாளர் புவனேஸ்வரி , துணை செயலாளர் மோகன் குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
எட்டு வயதுக்குட்பட்ட இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இது இளம் வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சதுரங்க விளையாட்டு விழாவில் GM அகாடமி துணைதலைவர் உமாராணி, ஆல்பா பள்ளி சார்பில் திருமதி நந்திதா, மற்றும் பள்ளி ஊழியர்கள், செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment