இன்றைய ராசிபலன் 18-07-2024
மேஷம் ராசிபலன்
நீண்ட காலமாக, நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விழைகிறீர்கள். கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு ஆதரவளிப்பதால், தற்போது இது ஒரு சிறந்த தருணம் ஆகும். சரியான காய் நகர்த்தல்களில் ஈடுபடுங்கள். அப்போது, நீங்கள் ஒரு உன்னத நிலையினை அடைவீர்கள். உங்களது அன்பிற்கினிய நண்பர்களும், நலம் விரும்பிகளும் அவர்களின் பரிந்துரைகளை கொடுத்துள்ளனர். அதிலிருந்து முடிந்தவரை பயனடைவது உண்மையிலேயே உங்களிடத்தில் தான் உள்ளது.
ரிஷபம் ராசிபலன்
உங்கது இயல்பான உள்ளுணர்வுகள் அதன் உச்சத்தைக் அடைந்துள்ளது. நீங்கள் ஒரு ஆசானாகவோ அல்லது அறிவாளியாகவோ உணர்வீர்கள். தனிநபர்கள் உங்களது ஆலோசனைகளை விரும்புவர். உங்களிடம் தெளிவான மற்றும் யோசனையில்லாத விஷயங்களைப் பற்றி தற்பெருமையோடு பேச முயற்சி செய்யாதீர்கள். இது உங்களை அறிவிலிகளாக மாறச்செய்யும். சில வருத்தமளிக்கும் சூழ்நிலைகள் உங்களை நோக்கி வரக்கூடும். ஆனாலும், நீங்கள் அவற்றை எதிர்த்து போராடமல் இருக்கப் போவதில்லை. எனவே, இயல்பாக இருங்கள்!
மிதுனம் ராசிபலன்
நீங்கள் உங்களது அனைத்து துன்பங்களை பகிர்ந்துகொள்ளவும், துயரங்களையும் யாரிடமாவது கொட்டித் தீர்ப்பதற்கும் ஒரு நபரை தேடலாம். உங்களது கவனம் தேவைப்படும் அதிமுக்கியத்துவமான விஷயங்கள் இருக்கும் போது, தேவையற்ற விஷயங்களை அறிய முற்படாமல் கவனமாக இருங்கள். நேர்மறையான சிந்தனைகள் உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறுவதற்கு நீண்டநேரம் ஆகலாம். இதனால், நீங்கள் சதாகாலமும் சிந்தித்துக் கொண்டேயிருக்கும் நிலையிருந்து மீண்டு பயனடையலாம். ஆரோக்கியமான உணவைப் பற்றி படித்தால் மட்டும் போதாது, மாறாக நீங்கள் அதைப் பின்பற்றவும் வேண்டும். இன்று முதல் ஒரு சரியான திசையினை நோக்கி பயணப்படுங்கள்.
கடகம் ராசிபலன்
உங்கள் மனதுக்கும், உடலுக்கும் பிரத்தியேக கவனம் தேவை. ஆனாலும், உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் செலவுகளைச் செய்வதில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களை நேசிப்பவர்கள் இன்று உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். மேலும், அவர்கள் உங்களை நேசிப்பதையும், அவர்கள் உங்களைப் பாராட்டுவதையும் நீங்கள் உணருவீர்கள். உங்கள் திறமையை அதிகரித்துக் கொள்ளக் கூடிய புத்தகங்களைப் படியுங்கள். ஏனென்றால் உங்களுக்கு மிக விரைவில் உயர் பதவி கிடைக்கலாம். உங்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் வாழ்வில் முன்னேற வாழ்த்தும் நபர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். செய்ந்நன்றி மறத்தல் கூடாது.
சிம்மம் ராசிபலன்
நடந்தது நடந்து விட்டது. நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கு தயாராக இருங்கள். உங்கள் அழகும், சாதுர்யமும் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு கைகொடுக்காது. உங்கள் செயல்பாடுகள் தான் உங்களைப் பற்றி வெளிப்படுத்தும். சிறிதுகாலம் ஆனாலும், உங்களது நிலையான கடின உழைப்பு உங்களுக்கு சிறந்த அங்கீகாரத்தைக் கொடுக்கும்.
கன்னி ராசிபலன்
நீங்கள் வாழ்க்கையையினையும், அதன் சிக்கல்களையும் மிக ஆழமாகத் தேடிப் பார்த்த நேரங்கள் உள்ளன. மாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். கொட்டிய பாலைப் பற்றி கவலைபடாமல், வாழ்க்கையை வளமாக்கும் நேரம் இதுவாகும். நன்றியுணர்வு என்பது நீங்கள் மறந்துவிடுகின்ற ஒன்று. இது உங்கள் வாழ்க்கையில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு முன்பு உங்களுக்கு உதவிய நபர்களுடன் மீண்டும் பழகுங்கள். எங்கள் வார்த்தையினைப் பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!
துலாம் ராசிபலன்
இன்று, உங்களது சமூக நிலைப்பாடு துடிப்பானதாகவும், உந்துதலாகவும் இருக்கும். எனவே, களிகூருங்கள். மேலும், உங்களது முகத்தை சிறப்பாக வெளிக்காட்டிக் கொள்ளுங்கள்! நீங்கள் காற்றிலே பறந்து செல்லும் பட்டாம்பூச்சி போன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இது உங்களுக்கு நடக்காது, செயலாற்றாது என்று தவறாக இருந்துவிடாதீர்கள். இதனால், நீங்கள் சில சவால்களையும் எதிர்கொள்வீர்கள். விடாமுயற்சியைக் கொண்டிருங்கள் அப்போது, வெற்றிக்கோப்பை மிக விரைவில் உங்களை அடையும். ஆகவே, கடினமாக உழையுங்கள்!
விருச்சிகம் ராசிபலன்
சில நேரங்களில் செயல்களை உங்கள் வழியிலேயே செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள், இந்த செயல்களைச் செயல்படுத்தும் போது உங்களுக்கென உள்ள தனிப் பண்புகளைப் பயன்படுத்திச் செயல்படுத்தலாம். இது கண்டிப்பாகப் பாராட்டைப் பெறும். தினமும் தொடர்ந்து செயல்படுத்தினால், நாளாக நாளாக அந்த செயல்களும் சிறப்பாகச் செயல்படத் தொடங்கும். உங்களைத் தடுத்து நிறுத்தும் பல விஷயங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதுபோன்ற அற்ப விஷயங்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிட முடியாது. புதிதாக ஒன்றை வாங்குவதாக இருந்தாலும், மனதில் தோன்றும் முடிவுகள் தவிர்த்து விட்டு, பணம் எவ்வளவு செலவாகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு ராசிபலன்
துரதிர்ஷ்டவசமான செயல்கள் உங்கள் பக்கமாக நகரும் என்பதால் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நேர்மறையாக இருங்கள், முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதற்கேற்ப முடிவு செய்யுங்கள். ஆனால், தேவையற்ற உணர்ச்சிகளை மறைத்து வைத்திருங்கள், ஏனென்றால் நீங்கள் இப்போது செய்யும் எந்தவொரு செயலையும் அவை தடுத்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள், அவற்றை நோக்கிச் செயல்படுங்கள். சுயநலக்காரர்களிடம் பேசுவதை விட்டு விடுங்கள். ஏனெனில், அவை எதிர்மறை மற்றும் சோகத்தைத் தவிர வேறொன்றையும் ஏற்படுத்தாது.
மகரம் ராசிபலன்
இன்று, அமைதியினை நிலைநாட்டுவது தான் உங்கள் முன்னுரிமையாக முதலிடத்தில் உள்ளது. ஒரு சில புத்திசாலித்தனமான நபர்கள் உங்களை அவர்களது பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இன்று, அவர்கள் உண்மையிலேயே உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவே விரும்புகிறார்கள். ஒருவேளை, அவர்கள் உங்களுக்கு சற்று எரிச்சலூட்டினால், நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வார இறுதி நாட்களானது மகிழ்ச்சியாக பொழுதைக் களிக்கும் பிரதான நோக்கத்திற்காகவே உள்ளன. ஏதாவது செய்யுங்கள். கிடப்பிலுள்ள வேலைகளைச் சமாளிக்க சிறந்த செயல் திட்டத்துடன் வாருங்கள்.
கும்பம் ராசிபலன்
உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட, உங்களது அன்பைக் காட்டத் தேர்ந்தெடுங்கள். உங்களது கனிவான வார்த்தைகள் அவற்றை செம்மையாக மாற்றும். புறங்கூறுபவர்களின் விமர்சனம் தான் வெற்றியை பத்து மடங்கு இனிமையாக்குகிறது என்பதை நினைவிற்க்கொள்ளுங்கள். இன்று, எதிர்பாராத ஒரு நபர் உங்களுக்கு உதவி செய்ய வருவார். இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்யத் தேர்வு செய்யுங்கள். சில காலமாக உங்களைப் பாதிக்கும் வலிகளையும், வேதனைகளையும் புறக்கணிக்காதீர்கள். இது தொழில்முறை நிபுணதத்துவம் கொண்ட ஒரு நபரால் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
மீனம் ராசிபலன்
உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றிட முடிவு செய்யுங்கள். உங்கள் மனத்தை நேர்மறையான விஷயங்களில் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். உங்கள்சவால்களைப்புத்திசாலித்தனமாகத்தேர்வு செய்யுங்கள். உங்கள் நேரத்திற்கு மதிப்பு இல்லாத விஷயங்களுக்குப் பின்னால், உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தில் வரும் புதிய வாய்ப்புகளுக்கு இன்னும் காத்திருக்கிறது. இந்த வாய்ப்புகளை அடைய இன்றுஉங்களுக்குக்கிடைக்கும் நேர்மறை ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
No comments