சர்தார்-2 படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் தவறி விழுந்து மரணம்
கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பின் பொழுது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்திலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் காயம் அடைந்து நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments